பழமை வாய்ந்த தமிழ் மண்ணின் கட்டுமான நுட்பங்கள்


பழமை வாய்ந்த தமிழ் மண்ணின் கட்டுமான நுட்பங்கள்
x
தினத்தந்தி 15 Jun 2018 9:30 PM GMT (Updated: 15 Jun 2018 12:30 PM GMT)

கட்டிடக்கலை நுட்பத்தில் பெரும் பாரம்பரியம் கொண்ட தமிழ் மண்ணின் சிறப்பு வாய்ந்த கட்டுமான அமைப்புகள் நினைவுச் சின்னங்களாக, இன்றும் பழங்கால பெருமையை வெளிக்காட்டி நிற்கின்றன.

ட்டிடக்கலை நுட்பத்தில் பெரும் பாரம்பரியம் கொண்ட தமிழ் மண்ணின் சிறப்பு வாய்ந்த கட்டுமான அமைப்புகள் நினைவுச் சின்னங்களாக, இன்றும் பழங்கால பெருமையை வெளிக்காட்டி நிற்கின்றன. அந்த வகையில் பழமையான நினைவு சின்னமாக கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகைமேடு என்ற இடம் உள்ளது. அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால கட்டிட அமைப்புகளில் கடைப்பிடிக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு யுக்திகள் பற்றியும் பல்வேறு செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அவை கல்வெட்டுக்கள் மற்றும் புலவர்களின் பாடல்கள் மூலம் வெளியாகி உள்ளன.

செங்கல் கட்டிடம்

கி.பி 1000–வது ஆண்டுகளில் தமிழ்நாட்டை ஆட்சி செய்த இராஜேந்திர சோழன் (ராஜராஜ சோழனின் மகன்) தனது வெற்றியை கொண்டாடும் விதத்தில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற தலைநகரை அமைத்தார். கருங்கற்களால் அமைக்கப்பட்ட அந்த ஊரில் உள்ள கோவில்கள் காலங்கள் பல கடந்து இன்றும் நிலைத்துள்ளன. மக்கள் வசித்த வீடுகள் மற்றும் அரண்மனை ஆகியவை செங்கற்கள், களிமண் மற்றும் மரங்கள் ஆகியவற்றால் கட்டப்பட்டதால், அவை காலப்போக்கில் மறைந்து விட்டன. வீடுகள் மற்றும் அரண்மனை வளாகங்கள் காலப்போக்கில் அழைந்து மண் மேடாக இருக்கும் பகுதியே இன்றைய மாளிகை மேடு ஆகும்.

வணிக வளாகங்கள்

1980–ம் ஆண்டுகளில் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினர் அப்பகுதியில் உள்ள மண் மலை, பொன்னேரி, கல்குளம், சின்ன மாளிகைமேடு முதலிய இடங்களை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அகழ்வாராய்ச்சி செய்தனர். 2009–ம் ஆண்டு உள்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் பெரிய அரண்மனை இருப்பது கண்டறியப்பட்டது. அரண்மனை அருகில் தரமணி சிந்தாமணி பெருந்திரு, மும்முடி சோழன் பெருந்திரு மற்றும் முடிகொண்ட சோழன் பெருந்திரு என்ற பெயர்களில் மூன்று விதமான வணிக வளாகங்கள் இருந்தது அறியப்பட்டுள்ளது.

 சுவர் அமைப்பில் தொழில்நுட்பம்

மாளிகை மேடு அகழ்வாராய்ச்சியின் மூலம் நன்றாகவும் சிறப்பாகவும் நிர்மாணிக்கப்பட்ட நகரமைப்பு இருந்தது தெரியவந்தது. மேலும், இந்த ஆய்வின் மூலம், இரண்டு பாதுகாப்பு சுவர்கள் ராஜேந்திர சோழன் பெயரிலும், குலோத்துங்க சோழன் பெயரிலும் நகரைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, அந்த இரட்டை சுவர்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளி (சிணீஸ்வீtஹ் கீணீறீறீ மிஸீsuறீணீtவீஷீஸீ விமீtலீஷீபீ) சுமாராக ஒரு அங்குல அளவு கொண்டதாகவும், அதில் சலித்த மணல் நிரப்பி வைக்கப்பட்டுள்ளதும் ஆய்வில் அறியப்பட்டுள்ளது.

சுண்ணாம்பு கலவை பூச்சு 

அந்த சுவர்கள் கீழ்ப்புறத்தில் கிட்டத்தட்ட நான்கு அடி அகலமும், மேல் புறத்தில் மூன்றேகால் அடியும் கொண்டதாக கட்டப்பட்டுள்ளன. அவற்றின் மேல் பூச்சாக சுண்ணாம்புக்கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது. நகரின் முக்கிய நுழைவாயில் திருவாசல் என்று அழைக்கப்பட்டது. முக்கிய சாலைகள் ராஜராஜன், ராஜேந்திர சோழன் ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்டன. தெருக்கள், பட்டுதெரு, திருவாசல் நரசம், சுத்தமல்லி சந்து, குலோத்துங்க சோழன் திருமதில் பெருவழி, விலங்குடையான் பெருவழி, கூழையானை போன பெருவழி என்று அழைக்கப்பட்ட செய்திகளும் தெரிய வந்துள்ளன.

கச்சிதமான உள்கட்டமைப்பு

வீடுகளில் பயன்படுத்தப்பட்ட ஓடுகள், இரும்புத் தாழ்ப்பாள்கள், ஆணிகள் கண்ணாடி வளையல்கள், சீன பாணி மண்பானைகள், இரும்புப் பதக்கங்கள், சிற்பங்கள், நாணயங்கள், செங்கற்கள் போன்றவை மாளிகை மேடு ஆய்வில் கிடைத்த பொருள்கள் ஆகும். கச்சிதமான நகரத் திட்டமிடல், உள் கட்டமைப்புகள் மற்றும் கலாசார வளர்ச்சி ஆகியவற்றுக்கு சான்றாகவும், பழந்தமிழரின் கட்டுமான நுட்பங்களை விளக்குவதாகவும் மாளிகை மேடு அரண்மனை அகழ்வாராய்ச்சிகள் அமைந்துள்ளன.

Next Story