புதுமையான கான்கிரீட் கலவை இயந்திரம்
வழக்கமாக நாம் பார்க்கும் கான்கிரீட் கலக்கும் இயந்திரத்தில் தேவையான சிமெண்டு, மணல், ஜல்லி, தண்ணீர் ஆகியவற்றை தக்க அளவுகளில் போட்டு, இயக்கி தயாரிக்கப்பட்ட கான்கிரீட் கலவை தரையில் ஒரு ‘பிளாஸ்டிக் ஷீட்’ விரித்து கொட்டப்படும்.
வழக்கமான முறை
பின்னர் அந்த கலவையை ‘ஸ்டீல் பாண்ட்டில்’ இறைத்து எடுத்து தேவையான பகுதிக்கோ அல்லது மேல் தளங்களுக்கோ கொண்டு செல்லப்படும். அந்த கான்கிரீட் கலவையை உடனடியாக மேலே கொண்டு செல்வதற்கு சாரங்கள் அமைக்கப்பட்டு பணியாளர்கள் வரிசையாக நின்று ஒருவருக்கொருவர் மாற்றி அனுப்புவார்கள்.
கலவை இயந்திரம்
கட்டுமானங்களுக்கு ரெடிமிக்ஸ் கான்கிரீட் பயன்படுத்தும்போது சம்பந்தப்பட்ட இடத்திற்கு குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு பணிகள் முடிக்கப்படும். அனைத்து கட்டுமான பணிகளுக்கும் அது சாத்தியமில்லை என்ற நிலையில் கலவை இயந்திரம் மூலம் கான்கிரீட் தயாரித்து தளத்திற்கு கொண்டு செல்லும் முறையே பல காலமாக நமது பகுதிகளில் இருந்து வருகிறது.
புதிய முறை
மேற்கண்ட பழைய முறைக்கு மாற்றாக கான்கிரீட் கலவையுடன் இணைந்த இழுவை ஏற்றி இயந்திரம் (Concrete Mixer cum Hoist) என்ற புதுமையான கருவி சமீபத்தில் நடந்த ஒரு கட்டுமான கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதாவது, தனிப்பட்ட முறையில் கிரேன் மற்றும் இழுவை ஏற்றிகள் எதுவும் தேவைப்படாத இந்த புதிய இயந்திரத்தின் மூலம், பணிகளை எளிதாக செய்யலாம். கான்கிரீட் கலவையை தயாரித்த கையோடு அதை மேல் தளங்களுக்கு உடனடியாக கொண்டு செல்லவும் இயலும். அதற்கு தனியாக ஆட்கள் வேண்டியதில்லை என்பது கவனிக்கத்தக்கது.
மூன்று அடுக்கு மாடிகள்
குறிப்பாக, மூன்று அடுக்கு மாடிகள் வரை கொண்ட கட்டுமானங்களுக்கு, அதாவது, 55 அடி உயரம் வரையில் உள்ள கட்டுமான பணிகளுக்கு இந்த இயந்திரம் பொருத்தமானது. வழக்கமான முறையிலிருந்து சற்றே புதுமையாக அமைக்கப்பட்ட இந்த கான்கிரீட் கலவை இயந்திரத்தை தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது. அதிலுள்ள கலவை உருளையின் நிமிடத்திற்கு 18 சுற்றுக்கள் என்ற நிலையில் கலவையை விரைவாக தயார் செய்யப்படும்.
இழுவை ஏற்றி முறை
இயந்திரத்தில் பொருத்தப்பட்ட 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட உருளையில் தயார் செய்யப்பட்ட கான்கிரீட் கலவையை தக்க முறையில் பாதுகாப்பாக மேல் தளங்களுக்கு கொண்டு செல்லலாம். உருளையோடு இணைந்த இழுவை ஏற்றியில் (Hoist) மேலும் கீழுமாக ‘கேபிள்’ மூலம் இயங்கக்கூடிய பக்கெட்டுக்கு கான்கிரீட் கலவை தாமாக அனுப்பப்படும். கிட்டத்தட்ட 200 லிட்டருக்கும் மேற்பட்ட கொள்ளளவு கொண்ட அந்த பக்கெட்டில் நிரப்பப்பட்ட கலவை மேல் தளங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
நகர்த்துவது எளிது
சுமார் 2000 கிலோ எடை கொண்டதாக உள்ள இந்த இயந்திரத்தை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால், பணியிடங்களுக்கு எளிதாக இழுத்துச்சென்று பயன்படுத்தலாம்.

Related Tags :
Next Story