பூஜை அறைக்கு அவசியமான குறிப்புகள்


பூஜை அறைக்கு அவசியமான குறிப்புகள்
x
தினத்தந்தி 29 Jun 2018 9:30 PM GMT (Updated: 29 Jun 2018 12:32 PM GMT)

வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குளியல் அறை அல்லது கழிவறைக்கு நேர் கீழாக, நேர் மேலாக அல்லது அவற்றுக்கு அடுத்ததாக பூஜையறை அமைவது கூடாது.

பூஜையறை அமைப்பில் வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிட்ட நுட்பமான வி‌ஷயங்களாவன:

* வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குளியல் அறை அல்லது கழிவறைக்கு நேர் கீழாக, நேர் மேலாக அல்லது அவற்றுக்கு அடுத்ததாக பூஜையறை அமைவது கூடாது. 

* பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது, மலர்கள் அர்ப்பணிப்பது, கற்பூரம் அல்லது ஊதுபத்தி ஏற்றுவது ஆகியவற்றால் நேர்மறை ஆற்றல் உருவாகிறது.

* நேர்மறை ஆற்றல் மூலம் கிடைக்கும் மன அமைதி, மன ஒருமை ஆகிய நிலைகள் தொடர்ந்த நன்மைகளை அளிக்க பூஜை அறையின் அமைவிடம் முக்கியமானது. 

* குளியல் அறை அல்லது கழிவறைக்கு பக்கத்தில் பூஜை அறை அமைந்திருந்தால் நேர்மறை சக்திகள் வலிமையை இழந்து, சுற்றுப்புற சூழலில் பரவியுள்ள சமநிலை பாதிப்படைகிறது.

Next Story