கட்டமைப்பிலிருந்து வெளியேற உதவும் ஆபத்து கால சறுக்குப்பாதை
அடுக்குமாடிகள் உள்ளிட்ட உயரமான கட்டிடங்களில் எதிர்பாராமல் ஏற்படும் நெருப்பு உள்ளிட்ட பல்வேறு ஆபத்துக் காலங்களில், அவற்றிலிருந்து இருந்து பாதுகாப்பாக வெளியேறும் முறைகள் பற்றி வல்லுனர்கள் வழிகாட்டுதல்களை அளித்துள்ளார்கள்.
அடுக்குமாடிகள் உள்ளிட்ட உயரமான கட்டிடங்களில் எதிர்பாராமல் ஏற்படும் நெருப்பு உள்ளிட்ட பல்வேறு ஆபத்துக் காலங்களில், அவற்றிலிருந்து இருந்து பாதுகாப்பாக வெளியேறும் முறைகள் பற்றி வல்லுனர்கள் வழிகாட்டுதல்களை அளித்துள்ளார்கள். அது போன்ற தருணங்களில் பயன்படுத்தக்கூடிய வழிமுறையாக சறுக்கிச்செல்லும் அமைப்புகள் என்று குறிப்பிடப்படும் ‘எஸ்கேப் சூட்’ (Escape Chute or Rescue Chute) உள்ளது. அதாவது, கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுவர்களில் ஏற்படுத்தப்பட்ட துவாரத்தின் வழியாக குழாய் போன்ற அமைப்பின் மூலம் கீழே சறுக்கிச்செல்வதாகும்.
விரைவாக இறங்கலாம்
மேல்தள சுவர்களில் அமைந்த துவாரம் தரைத்தளத்தில் வந்து சேரும் வழியானது கெட்டியான வெல்வெட் துணியால் இணைக்கப்பட்டிருக்கும். அதனால், துவாரம் வழியாக உள்ளே நுழைந்து சறுக்கிக் கொண்டு கீழே வரும்போது காயம் அல்லது சிராய்ப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாது. அவசர காலத்தில் ஒருவர் பின் ஒருவராக கீழே குதித்து வெளியேறும்போது, விழுந்துவிடாதபடி துணியை பிடித்துக்கொண்டும் விரைவாக இறங்க இயலும். 15 அல்லது 20 நிமிடங்களில் நூற்றுக்கணக்கான பேர்களை ஆபத்து காலங்களில் மேல் மாடிகளிலிருந்து சுலபமாக கீழே வர இந்த அமைப்பு உதவி செய்வதாக அதன் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூறு ஆண்டுகளாக உபயோகம்
150 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வகையிலான வழுக்கிச்செல்லும் துணி அமைப்புகள் நடைமுறைக்கு வந்து விட்டன. 1970–ம் ஆண்டுகளில் அவற்றில் உள்ள குறைகளை அகற்றி கச்சிதமான மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன் பின் நிறைய கட்டிடங்களில் பொருத்தி சோதனை செய்து, அதன் பயன்பாடு பற்றி உறுதி செய்யப்பட்டது. நவீன தொழில் நுட்பம் மூலம் நெருப்பால் பாதிக்கப்படாத மேம்படுத்தப்பட்ட ‘மாடர்ன் பேப்ரிக்’ வகை துணி வகை இதில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
மூன்று வகைகள்
மூன்றுவித வடிவமைப்புகளில் இவ்வகை ‘எஸ்கேப் சூட்டுகள்’ இப்போது சந்தையில் கிடைக்கின்றன. முதலாவது முறையில் துவாரம் மூலம் துணி வழியாக நேர் செங்குத்தான வழியில் கீழே வரலாம். அடுத்ததாக உள்ள அமைப்பில் அதன் கீழ்ப்பகுதி மட்டும் குறிப்பிடத்தக்க அளவில் வளைவாக அமைக்கப்பட்டிருக்கும். மூன்றாவது அமைப்பு சுழன்றவாறே கீழே செல்லும்படியாக இருக்கும். அந்த அமைப்பில் உள்ள விஷேசமானது கீழே குதிப்பவரின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு, மெதுவாக செல்லும்படி இருக்கும்.
மேலை நாடுகளில் பயன்பாடு
மேற்கண்ட எஸ்கேப் சூட் முறைகள் மேலைநாடுகளில் உபயோகத்தில் இருந்து வருகின்றன. பொதுவாக, ‘ஷாப்பிங் மால்’ என்ற பெரிய அளவிலான வணிக வளாகங்கள், உயரம் அதிகமான அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் விமானக் கட்டுப்பாடு அறை ஆகியவற்றில் இந்த முறை பயன்பாட்டில் இருப்பது தெரிய வந்துள்ளது. நமது பகுதிகளிலும் பெருநகரங்களில் ஆங்காங்கே பயன்படுத்தப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
Related Tags :
Next Story