வலிமையான சுவர் அமைப்பதில் வல்லுனர் வழிமுறைகள்


வலிமையான  சுவர்  அமைப்பதில்  வல்லுனர்  வழிமுறைகள்
x
தினத்தந்தி 14 July 2018 4:00 AM IST (Updated: 13 July 2018 5:57 PM IST)
t-max-icont-min-icon

வழக்கமான கட்டமைப்புகளில் உள்ள சுவர்களின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கலுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது.

ழக்கமான கட்டமைப்புகளில் உள்ள சுவர்களின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கலுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. செங்கல் தயாரிப்பில் பாரம்பரிய முறையான சூளையில் உருவாவது மற்றும் நவீன முறை சேம்பர் உருவாக்கம் என இரண்டு வகையாக அவை கட்டுமான பணிகளுக்கு அனுப்பப்படுகின்றன. 

இரண்டு வகை

மேற்சொல்லப்பட்ட இரண்டு வகைகளும் கட்டுமான பணிகளுக்கு பொருத்தமானவை என்றாலும் அவற்றால் அமைக்கப்பட்ட சுவர்களின் உறுதி குறிப்பிட்ட வரையறைக்குள் அமைந்ததாகவே இருக்கும். செங்கல் சுவர்கள் பாதுகாப்புக்கு ஏதாவது சுலபமான வழிவகைகள் உண்டா என்ற கேள்விகள் பலருக்கும் உண்டு. ஏனென்றால், அவற்றை உடைப்பது அல்லது துளையிடுவது ஆகியவற்றை எளிதாக செய்ய முடியும்.

வெவ்வேறு வகை சுவர்கள்

குறிப்பாக, சுற்றுச்சுவர் அமைப்பில் கீழ்க்கண்ட முறையை கையாண்டால் எளிதில் உடையாத உறுதியான சுவர் அமைப்பை உருவாக்குவது சாத்தியம் என்று பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். செங்கல் உள்ளிட்ட ஹாலோபிளாக் மற்றும் சாலிட் பிளாக் போன்ற வெவ்வேறு கற்களை பயன்படுத்தி சுவர்கள் அமைக்கும்போதும் இந்த முறையை கையாளலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கம்பிவலை உள்ளீடு

சாதாரண பொருட்களை கொண்டு உயர்ந்த பாதுகாப்பு கொண்ட சுவர்களை அமைக்கும் வழிமுறையானது செங்கல் சுவர் கட்டப்படும்போது அவற்றின் உள்ளீடாக கம்பி வலை அல்லது டி.எம்.டி கம்பிகளை வைத்து சிமெண்டு காரை கொண்டு பூசப்பட்டு சுவர்களை எழுப்புவதாகும்.

கம்பிகள் உள்ளீடு

அதாவது, செங்கல்களை அடுக்கும்போது, ஒவ்வொரு வரிசையிலும் கம்பி வலையை சிறு துண்டுகளாக வைத்து அதன் மேல் செங்கல் வைத்து சிமெண்டு கலவை பூச்சு அமைக்கப்படும். அல்லது, செங்கல் வைப்பதற்கு முன்னர் டி.எம்.டி கம்பிகளையும் சுவருக்கு இணையாக, உள்ளீடாக வைத்தும் சுவர்களை கட்டி எழுப்பலாம்.

விரிசல்கள் வராது

செங்கல் அடுக்கு மீது டி.எம்.டி கம்பிகளை ஒரு வரிசையில், ஒன்று அல்லது இரண்டு ஆகிய எண்ணிக்கையில் வைக்கலாம். அவ்வாறு வைக்கப்படும்போது கலவையில் பதியும் வகையில் கம்பிகள் இருக்கவேண்டும். இந்த முறையால், கட்டிடத்தின் மேல் ஏற்படும் அழுத்தம், செங்கல் வாயிலாக கீழ் நோக்கி இறங்கும்போது ஆங்காங்கே உருவாகும் உடைப்பு அல்லது விரிசல்கள் தடுக்கப்படுகிறது.

கூடுதல் பட்ஜெட்

மேலும், புயல், மழை ஏற்படும் காலங்களிலும் சுவர்கள் உடைவது அல்லது பிறரால் உடைக்கப்படுவது ஆகிய பாதிப்புகளையும் இவ்வகை சுவர்கள் தாங்கி நிற்பதாக சொல்லப்படுகிறது. வழக்கமான முறையை விடவும், சுவருக்கு வலு கூட்டும் முறையாக இருப்பதால், இவ்வகை சுவர்கள் அமைக்க சற்று கூடுதல் பட்ஜெட் ஆகலாம். 

Next Story