வாஸ்து மூலை : மாடிப்படிகள் அமைக்க வேண்டிய முறை


வாஸ்து மூலை : மாடிப்படிகள் அமைக்க வேண்டிய முறை
x
தினத்தந்தி 21 July 2018 10:55 AM IST (Updated: 21 July 2018 10:55 AM IST)
t-max-icont-min-icon

ஒரு வீட்டின் மாடிப்படி என்பது தலைவாசலுக்கு இணையான முக்கியத்துவம் கொண்டது. வாஸ்து ரீதியாக அதன் அமைப்பில் கவனிக்க வேண்டியவை :

* மேல் நோக்கி ஏறுவது மற்றும் கீழ் நோக்கி இறங்குவது என்ற இரண்டு தத்துவங்களின் அடிப்படையை மாடிப்படிக்கட்டுகள் உணர்த்துகின்றன.

* அதன் காரணமாக, முதல் படியில் கால் வைக்கும்போது ஏறுபவர் முகம் கீழ்த்திசைகளான கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி இருப்பது முறை.

* வீட்டுக்கு உட்புறமோ அல்லது வெளிப்புறமோ தேவையான இடத்தை தேர்வு செய்து மாடிப்படிகளை அமைக்கலாம்.

* வீடுகளின் உட்புறம் படிக்கட்டுகள் அமைக்கும்போது அந்த இடத்தின் தெற்கு அல்லது மேற்கு பகுதியின் மத்தியில் அமைப்பது சிறப்பு.

* வீட்டுக்கு வெளிப்புறம் மாடிப்படிகள் அமைக்கும்போது மொத்த அமைப்புக்கு தென்கிழக்கு, வடமேற்கு பகுதிகளில் திறந்தவெளி படிகளாக அமைப்பது நல்லது. 

Next Story