கான்கிரீட்டில் உள்ள கம்பிகளை பாதுகாக்கும் தொழில்நுட்பம்


கான்கிரீட்டில் உள்ள கம்பிகளை பாதுகாக்கும் தொழில்நுட்பம்
x
தினத்தந்தி 11 Aug 2018 5:32 AM GMT (Updated: 11 Aug 2018 5:32 AM GMT)

இன்றைய நிலையில் கட்டுமான பொறியாளர்களுக்கு சவாலாக இருப்பது, கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட கம்பிகள், துருப்பிடிப்பதன் காரணமாக கட்டமைப்புகளில் ஏற்படும் பாதிப்புகளாகும்.

ன்றைய நிலையில் கட்டுமான பொறியாளர்களுக்கு சவாலாக இருப்பது, கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட கம்பிகள், துருப்பிடிப்பதன் காரணமாக கட்டமைப்புகளில் ஏற்படும் பாதிப்புகளாகும். அதற்கான முக்கிய காரணம், கான்கிரீட்டில் அமைப்புகளில் உள்ள கண்ணுக்குத் தெரியாத ‘மைக்ரோபோர்ஸ்’ என்று சொல்லப்படும் நுண்ணிய துளைகள் வழியாக தண்ணீர் உட்புகுவதே ஆகும்.

நுண் துளைகள்

மழை, பனி ஆகிய காலங்கள் அல்லது இதர காரணங்களால் கான்கிரீட் அமைப்புகளின் கண்ணுக்கு தெரியாத நுண் துளைகள் மூலம் கட்டிடங்களில் ஈரப்பதம் ஊடுருவி ஆர்.சி.சி அமைப்பில் உள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடித்து அரிக்கப்படுகின்றன. துருவின் காரணமாக கம்பிகளின் சுற்றளவு அதிகரிப்பதால் ஏற்படும் விரிசல்களால் கட்டிடம் பாதிப்படைகிறது. இந்தப் பிரச்சினையை சரி செய்ய பல்வேறு தனியார் நிறுவனங்கள் ‘மைக்ரோ சிலிக்கா’ என்ற மூலப்பொருளை தயார் செய்து பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

ஆராய்ச்சிகள்

அவற்றை பல்வேறு ஆராய்ச்சிகளிலும், நடைமுறைகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கான அறிவியல்பூர்வமான சான்றுகளும் வெளியாகி உள்ளன. துருவால் உண்டாகும் சிக்கலை தவிர்க்க, கட்டுமான பொறியியல் அறிஞர்கள் இந்திய அளவில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தீர்வுகளையும் கண்டறிந்துள்ளார்கள்.

‘மைக்ரோ சிலிக்கா’

மேற்கண்ட, துரு பிரச்சினைக்கு வலிமையான தடுப்பு சக்தி கொண்ட மூலப்பொருளாக ‘மைக்ரோசிலிக்கா’ (Micro Silica) என்று பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மைக்ரோ சிலிக்கா மூலப்பொருளில் வலிமையான
Reinforced fiber
இருப்பது அதற்கு முக்கிய காரணமாகும்.

வலிமையான மூலக்கூறுகள்

கட்டுமானங்களில் நீராற்றல் செய்யும்போது உருவாகக் கூடிய நுண்ணிய விரிசல்கள் ஏற்படாமல் தடுத்து கட்டிடத்தை மைக்ரோ சிலிக்கா பாதுகாக்கிறது. ஒவ்வொரு கிலோகிராம் மைக்ரோ சிலிக்காவில் லட்சக்கணக்கான ‘பைபர் ரீ-இன்போர்ஸ்டு’ மூலக்கூறுகள் அடங்கியுள்ளன.

குடியிருப்புகள் வடிவமைப்பு

இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சுனாமி மற்றும் பூகம்பம் ஆகிய பாதிப்புகளையும் தாங்கி நிற்கும் குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை நமது பகுதி கட்டுமான பொறியாளர்கள் வடிவமைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதாவது. மைக்ரோ சிலிக்காவில் அதிகப்படியான உறுதி கொண்டதாகவும், காலச் சூழ்நிலைகளை தாங்கி நிற்கக்கூடிய ‘மைக்ரோ பார்டிகிள்ஸ்’ (Micro Particles) அடங்கியிருக்கிறது.

பல நன்மைகள்

கான்கிரீட் கலவைகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தனித்தனியே பிரியாமல் ஒரே சீராக இணைந்திருக்க மைக்ரோ சிலிக்கா உதவுகிறது. சுருக்க விரிசல்கள் மற்றும் நுண்ணிய விரிசல்கள் ஏற்படாமலும் கட்டுப்படுத்துகிறது. கான்கிரீட்டின் தேய்மானத்தை தடுப்பதோடு, வளையும் திறன், அழுத்தம் தாங்கும் திறன், இணக்கம் மற்றும் இழுவிசைத் திறம் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், கான்கிரீட்டிற்குள் நீர் ஊடுருவாமல் தடுப்பதால் டி.எம்.டி கம்பிகள் துருப்பிடிக்காமல் பாதுகாக்கப்படுகின்றன.

Next Story