உங்கள் முகவரி

வீடுகள் மற்றும் வர்த்தக கட்டிடங்களுக்கான ஜி.எஸ்.டி கணக்கீடு + "||" + Homes and For commercial buildings GST calculation

வீடுகள் மற்றும் வர்த்தக கட்டிடங்களுக்கான ஜி.எஸ்.டி கணக்கீடு

வீடுகள்  மற்றும்  வர்த்தக  கட்டிடங்களுக்கான  ஜி.எஸ்.டி  கணக்கீடு
தனி வீடு அல்லது அடுக்குமாடி வீடு ஆகியவற்றை வாங்கும்போதும், வர்த்தக கட்டமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரி பற்றிய தகவல்களை அனைவரும் அறிந்து கொள்வது அவசியம்.
னி வீடு அல்லது அடுக்குமாடி வீடு ஆகியவற்றை வாங்கும்போதும், வர்த்தக கட்டமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரி பற்றிய தகவல்களை அனைவரும் அறிந்து கொள்வது அவசியம் என்று ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். சொந்த வீடு என்பது வாழ்நாள் முதலீடு என்ற நிலையில் அதன் சந்தை மதிப்பு தவிர பல வி‌ஷயங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், வீடுகள் மற்றும் வர்த்தக கட்டமைப்புகளுக்கான ஜி.எஸ்.டி கணக்கீடு பற்றி அவர்கள் தரும் தகவல்களை இங்கே காணலாம்.

மூன்று நிலைகள்

பொதுவாக, வீடுகள் உள்ளிட்ட இதர கட்டிட அமைப்புகள் வாங்கப்படும் சமயத்தில் செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி–யை கணக்கிடும்போது, 

1) பணிகள் நடப்பில் உள்ள கட்டிடங்கள்  

2) தயார் நிலை கட்டிடங்கள்

3) வாடகைக்கு விடப்படும் கட்டிடங்கள்  என்ற மூன்று நிலைகளாக பிரித்து அறிந்து கொள்ளலாம். 

பணிகள் நடப்பில் உள்ள கட்டிடங்கள்   

கட்டுமான பணிகள் நடைபெறும் நிலையில் இருந்தாலும், கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெறப்படாமல் இருந்தாலும் வரி செலுத்தவேண்டும். கட்டுமான பணிகள் நடக்கும் கட்டிடங்களுக்கு மூலப்பொருட்கள் உள்ளிட்ட இதர சேவைகளின் அடிப்படையில் ஜி.எஸ்.டி 12 சதவிகிதம் கணக்கிடப்படும். ரியல் எஸ்டேட் நிறுவனத்திடமிருந்து வீடுகளை வாங்க முடிவெடுக்கும்போது பணி நிறைவு சான்றிதழ் பெற்ற கட்டிடங்களை வாங்குவதன் மூலம் 12 சதவிகித ஜி.எஸ்.டி வரியை தவிர்க்கலாம்.   

தயார் நிலை கட்டிடங்கள்

தயார் நிலையில் உள்ள கட்டமைப்புகள், மறு விற்பனை செய்யப்படும் கட்டமைப்புகள் ஆகியவற்றிற்கு ஜி.எஸ்.டி கணக்கிடப்படுவதில்லை. அதனால், தயார் நிலையில் உள்ள சொத்துக்கள் அல்லது மறு விற்பனை செய்யும் சொத்துக்களை தேர்வு செய்து வாங்கலாம். ஆனால், வழக்கமான பத்திர பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் ஆகியவற்றை செலுத்தவேண்டும். முத்திரைத்தாள் கட்டணம் அவசியம் என்ற நிலையில் பெண்களின் பெயரில் சொத்துக்கள் வாங்குவதன் மூலம் 1 சதவிகித பதிவு கட்டணத்தை தவிர்க்க இயலும்.   

வாடகை பெறும் வர்த்தக கட்டிடங்கள் வாடகைக்கு விடப்படும் வர்த்தக கட்டிடங்களுக்கு அதன் வாடகை வருமானத்தில் 18 சதவிகித ஜி.எஸ்.டி விதிக்கப்படும். வணிக பயன்பாட்டுக்காக கட்டிடங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் வருவாய் கிடைக்கும் பட்சத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் வரி கணக்கிடப்படும். அவ்வாறு வாடகை பெறுபவர்கள் ஜிஎஸ்டி–யின் கீழ் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக வருமானம் ஈட்டுவோருக்கும், குடியிருப்புகளுக்கான வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கும் ஜி.ஸ்.டி கணக்கிடப்படாது.