மணல்–நீர் பயன்பாடு குறைவான கட்டுமான தொழில்நுட்பம்


மணல்–நீர் பயன்பாடு குறைவான கட்டுமான தொழில்நுட்பம்
x
தினத்தந்தி 11 Aug 2018 5:51 AM GMT (Updated: 11 Aug 2018 5:51 AM GMT)

வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டு வரும் செங்கற்களுக்கு பதிலாக புதிய ரக ஹாலோ பிளாக் போன்ற செங்கல் வகைகள் ‘புரோதெர்ம் டிரைபிக்ஸ் சிஸ்டம்’ என்ற தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டு வரும் செங்கற்களுக்கு பதிலாக புதிய ரக ஹாலோ பிளாக் போன்ற செங்கல் வகைகள் ‘புரோதெர்ம் டிரைபிக்ஸ் சிஸ்டம்’ என்ற தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கட்டிட சுவர்களை சுலபமாக அமைக்கும்படியும், அவற்றை கட்டுமான பணியாளர்கள் எளிதாக கையாளும் வகையில் எடை குறைவாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற வெப்ப நாடுகளுக்கு வெயில் கால வெப்பத்தின் பாதிப்பை தவிர்க்க உதவும் வகையில் இந்த புதுமையான செங்கல் நுட்பம் அமைந்துள்ளது. 

சிக்கன செலவு

கட்டுமான பணிகளுக்கு மணல் கிடைப்பது பற்றிய கட்டுப்பாடுகள் 

மற்றும் நகர்ப்புறங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஆகிய சிக்கல்களால் கட்டுமான பணிகள் பாதிப்பு என்ற நிலை இதில் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும், பில்டர்கள் கட்டிடங்களை குறித்த காலத்தில் விரைவில் கட்டி முடிப்பதற்கேற்ற நவீன தொழில்நுட்ப அணுகுமுறைகளை இவ்வகை செங்கல் கொண்டுள்ளது. சிக்கனமான செலவு மற்றும் விரைவான கட்டமைப்பு தொழில் நுட்பம் ஆகியவற்றை கொண்டதோடு உறுதியாகவும், நெருப்பை எதிர்த்து நிற்கும் தன்மை மற்றும் பராமரிப்பு செலவுகள் இல்லாத வகையிலும் இவ்வகை கற்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக, தண்ணீரை அதிகமாக உறிஞ்சாத தன்மை கொண்டதாகவும், வெவ்வேறு வண்ணங்களில் சந்தையில் கிடைப்பதாகவும் அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் தேவை குறைவு

மேற்கண்ட டிரைபிக்ஸ் சிஸ்டம் தொழில்நுட்பத்தின் மூலம் மணல் மற்றும் தண்ணீர் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைவதன் காரணமாக, தொழிலாளர் கூலி உள்ளிட்ட செலவுகளில் குறிப்பிடத்தக்க அளவு சேமிப்பாக மாறும். பொதுவாக, கட்டுமான அமைப்புகளின் ஒவ்வொரு மீட்டர் சுவர் கட்டுமானத்திற்கும் சராசரியாக 350 லிட்டர் தண்ணீர் நுகரப்படுவதாக ஒரு கணக்கீடு இருக்கிறது. அந்த அளவை பெருமளவுக்கு குறைப்பதில் ‘டிரைபிக்ஸ் சிஸ்டம்’ உதவி செய்வதாகவும் கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

காரைக்கு மாற்றாக ஒருவகை பசை

மேலும், மரபு சார்ந்த ஈரக்காரை முறைக்கு மாற்றாகவும், சுவர்கள் அமைப்பில் சிமெண்டு காரை மூலம் இணைக்கப்பட்ட பகுதிகளை நீராற்றும் பணிகளுக்கான தண்ணீருக்கான தேவையை கட்டுப்படுத்துவதோடு, மணல் மற்றும் நீரின் அளவை பெருமளவு குறைக்கும் வகையிலும் ஒரு வகை பசை (நிலிஹிணி) இந்த ‘டிரைபிக்ஸ் சிஸ்டம்’ உடன் கிடைக்கிறது. ஒவ்வொடு செங்கலுக்கு இடையிலும் நல்ல பிணைப்பை ஏற்படுத்துவதோடு, சுற்றுச் சூழலுக்கு ஏற்றதாகவும், நல்ல பிடிப்பு கொண்டதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளதால் கட்டுமான பணிகளில் எளிதாக பயன்படுத்தி பலன்களை பெற இயலும் என்று அதன் தயாரிப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story