சமையலறைக்கு ஏற்ற மின் புகைபோக்கி தொழில்நுட்பம்


சமையலறைக்கு  ஏற்ற  மின்  புகைபோக்கி  தொழில்நுட்பம்
x
தினத்தந்தி 11 Aug 2018 5:54 AM GMT (Updated: 11 Aug 2018 5:54 AM GMT)

இன்றைய காலகட்ட, எல்.பி.ஜி அடுப்புகள் கொண்ட சமையலறைகளில் காற்றோட்ட வசதிக்காக ‘எக்சாஸ்ட்’ மின் விசிறி பொருத்துவது வழக்கம்.

ன்றைய காலகட்ட, எல்.பி.ஜி அடுப்புகள் கொண்ட சமையலறைகளில் காற்றோட்ட வசதிக்காக ‘எக்சாஸ்ட்’ மின் விசிறி பொருத்துவது வழக்கம். அதன் நீட்சியாக அடுப்புக்கு நேர் மேலே ‘சிம்னி’ என்ற மின் புகைபோக்கிகள் அமைப்பது நடைமுறைக்கு வந்தது. பல்வேறு வசதிகள் மற்றும் வடிவங்களில் கிடைக்கும் அவற்றை குடும்ப நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொருத்துவதோடு, அடுப்பின் அளவை விடவும் கொஞ்சம் பெரிதான அளவு கொண்டதாகவும் அமைக்கவேண்டும். ‘சிம்னி’ அமைப்பு பற்றி உள் கட்டமைப்பு நிபுணர்கள் அளிக்கும் தகவல்களை இங்கே காணலாம். 

‘சிம்னி’ வகைகள்

1) அறையின் நடுவில் சமையல் மேடை அமைத்து, அதன் மேற்புறத்தில் பொருத்தப்படும் ‘ஐலேண்ட் கிச்சன் சிம்னி’, 

2) ‘பீம்’ அல்லது தூண்கள் இல்லாத பகுதிகளில் ‘வென்ட்’ அமைத்து பொருத்தப்படும் ‘வால் மவுண்டடு சிம்னி’, 

3) இரு பக்கமும் அடைபடக்கூடிய மூலைகளில் பொருத்தும் ‘கார்னர் சிம்னி’, 

4) ‘மாடுலர் கிச்சன்’ என்று சொல்லப்படும் நவீன சமையலறையின் அலமாரிகளில் பொருத்தப்படும் ‘பில்ட் இன் சிம்னி’, 

5) சமையல் அறையில் சத்தம் வராமல் இருக்கும் வகையில் அமைந்த புதிய அறிமுகமான மோட்டார் வெளியே பொருத்தப்பட்ட ‘ஸ்ப்ளிட் சிம்னி’ போன்ற பல்வேறு வகைகள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. 

‘பில்டர்’ அமைப்புகள்

சிம்னிகள் புகையை வெளியேற்றும்போது அவற்றில் ஏற்படும் புகை படிமானங்களை வடிகட்ட விதவிதமான வடிகட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, ‘மெஷ்’ என்ற சல்லடை அமைப்பு சிம்னிகளில் இருக்கும். எண்ணெய் மற்றும் புகையை தனியாக ‘பேபில் பில்டர்’ என்ற வகை பிரிக்கிறது. இது, அலுமினியம், எவர்சில்வர் என இரு நிலைகளில் உள்ளது. புகையை உறிஞ்சிக்கொண்டு சுத்தமான காற்றை வெளியே விடும் ‘சார்கோல் பில்டர்’ (கரி வடிகட்டி) அமைப்பானது காற்றை மறுசுழற்சி செய்வது போல் செயல்படக்கூடியது. அதனால், கரியை அவ்வப்போது மாற்ற வேண்டியது அவசியம்.

காற்று உறிஞ்சும் தன்மை

சிம்னிகளில் காற்று உறிஞ்சப்படுவது 400 சிuதீவீநீ வி/லீக்ஷீ என்ற அளவுக்கும் மேலிருந்தால் வேகமானது என்றும், அந்த அளவுக்கும் குறைவாக இருப்பது மித வேகம் என்றும் சொல்லப்படும். ‘புளோயர்ஸ்’ என்ற  காற்றாடிகளின் அமைப்பை பொறுத்து சிம்னிகளில் காற்று உறிஞ்சும் தன்மை அமைகிறது.

சுத்தம் செய்யும் முறைகள்

சில சிம்னிகளில் தாமாகவே நீரை அடித்து பாய்ச்சி சுத்தம் செய்து கொள்ளும் முறையும் உள்ளது. மேலும், எண்ணெய் பிசுக்குகள் பிரிக்கப்பட்டு தனியாக சேகரிக்கும் வசதி கொண்ட சிம்னிகளும் உள்ளன. அதாவது, ‘நான் ஸ்டிக்’ படிமம் மூலம் எண்ணெய் பிசுக்கு மோட்டாரின் உட்புறத்தில் படியாமல் உள்ளே இருக்கும் ஒரு சிறிய ‘டப்பா’ போன்ற அமைப்பில் சேமித்துக்கொள்ளும் வசதி கொண்டதாகும். 

மின் விளக்குகள்

சமைக்கும்போது பாத்திரத்தின் மீது வெளிச்சம் நேரடியாக விழுவது போன்று நவீன மின் விளக்குகள் பொருத்தப்பட்ட சிம்னிகளும் இருக்கின்றன. அவற்றை தேர்வு செய்தும் பயன்படுத்தலாம். 

மோட்டார் சத்தம்

பல்வேறு வகைகளாக உள்ள சிம்னிகள் எழுப்பும் சத்தம் பற்றியும் பற்றி விசாரித்து அறிந்து கொண்டு வாங்கவேண்டும். பொதுவாக, அதிக மின் திறன் உள்ள மோட்டார் பொருத்தப்பட்டவை நன்றாக செயல்படுவதாக தகவல் உள்ளது. 

கச்சிதமான பயன்பாடு

பொதுவாக, குடும்ப உறுப்பினர்கள் 6 பேர்கள் என்றால் 1000 சிuதீவீநீ வி/லீக்ஷீ என்ற அளவில் புகை உறிஞ்சும் திறன் கொண்ட சிம்னியை பயன்படுத்தலாம். புகை எளிதாக வெளியேறும் விதமாகவும், பராமரிக்க சுலபமாகவும் இருப்பதுபோல சிம்னியை பொருத்த வேண்டும் என்ற அடிப்படையில் 4 அடி உயரத்தில் அமைக்கவேண்டும்.

Next Story