மனை பரப்பளவை காட்டும் நில அளவை வரைபடம்


மனை பரப்பளவை காட்டும் நில அளவை வரைபடம்
x
தினத்தந்தி 18 Aug 2018 10:48 AM IST (Updated: 18 Aug 2018 10:48 AM IST)
t-max-icont-min-icon

நில அளவை வரைபடம் என்ற புலப்படம் (FMB- Field Measurement Book) என்பது நிலத்தின் உரிமையாளருடைய அனுபவ எல்லைகளின்படி அளவை செய்யப்பட்டு, நிலத்தின் பதிவுருக்கள் (வரைபடம்) தயார் செய்யப்பட்டு வருவாய்த் துறையால் பராமரிக்கப்படும் நிலத்தின் வரை படமாகும்.

அவை, ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் உள்ள நன்செய், புன்செய், தரிசு நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் (நத்தம் சர்வே) என நில வகைப்பாட்டிற்கு தகுந்தவாறும், கிராமத்தின் மொத்த பரப்பிற்கு ஏற்றவாறும் புல எண்கள் தரப்பட்டு, தயாரிக்கப்பட்ட மாவட்ட வருவாய்த்துறை ஆவணமாக இருக்கும்.

அந்த புலப்படத்தின் மேல் பகுதியில் குறிப்பிட்ட மாவட்டம், உரிமையாளர் பெயர், வருவாய் வட்டம் மற்றும் வரிசை எண், வருவாய் கிராமத்தின் பெயர், புல எண்ணின் மொத்தப் பரப்பு, படம் எந்த அளவின் அடிப்படையில் வரைவு செய்யப்பட்டுள்ளது என்ற விபரங்கள் குறிக்கப்பட்டிருக்கும்.

புல எண்ணின் பக்கப் புல எண்களும் எழுதப்பட்டு அடிக்கோடு இடப்பட்டிருக்கும். புலப்படத்தில் எத்தனை நில உரிமையாளர்கள் உள்ளார்களோ அதற்கேற்ப உட்பிரிவு எண்கள் இடம் பெற்றிருக்கும். 

Next Story