சிக்கன பட்ஜெட்டில் குடியிருப்புகளை அமைக்கலாம்


சிக்கன  பட்ஜெட்டில் குடியிருப்புகளை அமைக்கலாம்
x
தினத்தந்தி 25 Aug 2018 3:00 AM IST (Updated: 24 Aug 2018 5:10 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பணிகளில் ஏற்படும் மொத்த செலவினங்களில் சேமிப்பு என்பது ஒரு கூட்டு முயற்சி என்று கட்டுமானத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ட்டுமான பணிகளில் ஏற்படும் மொத்த செலவினங்களில் சேமிப்பு என்பது ஒரு கூட்டு முயற்சி என்று கட்டுமானத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, கட்டிட கலைஞருடைய திட்டமிட்ட வரைபடங்கள், கட்டுமான பொறியாளர், வடிவமைப்பு பொறியாளர் ஆகியோர்களின் திறமை ஆகியவற்றோடு அனுபவம் பெற்ற கட்டிட பொறியாளரின் தொடர்ச்சியான மேற்பார்வை போன்றவற்றால் கட்டுமான பணிகளுக்கான செலவை சிக்கனமாக முடிக்கலாம் என்று அறியப்பட்டுள்ளது. 

குறிப்பாக, நவீன தொழில் நுட்ப முறையில் தயாரிக்கப்பட்ட கட்டுமான பொருள்களை பணியில் பயன்படுத்துவதன் மூலமாகவும் செலவுகளில் சிக்கனம் ஏற்படுவது அறியப்பட்டுள்ளது. 

மேலும், கட்டிட பணிகளுக்கான பொருட்களை சரியான காலத்திலும், அளவிலும் பயன்படுத்தும் திறன், அவசியமில்லாத செலவுகளை கச்சிதமாக தவிர்க்கும் திறமை பெற்ற கட்டுனர்கள் அல்லது ஒப்பந்தக்காரர்கள் ஆகியோர்களாலும் கட்டுமான செலவுகள் அதிகமாவது தவிர்க்கப்படுகிறது. 

கட்டுமான பணிகள் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் திட்டமிட்ட கால அளவிற்குள் அவற்றை முடிக்கும் பட்சத்தில் செலவுகள் எகிறாமல் இருக்கும் என்பது அனுபவம் பெற்றவர்களின் கருத்தாக உள்ளது.

Next Story