பாதிப்புகளை தடுக்கும் கட்டுமான பரிசோதனை


பாதிப்புகளை  தடுக்கும் கட்டுமான  பரிசோதனை
x
தினத்தந்தி 24 Aug 2018 10:00 PM GMT (Updated: 24 Aug 2018 11:43 AM GMT)

கட்டுமான அமைப்புகளில் என்ன காரணங்களின் அடிப்படையில் பாதிப்புகள் அல்லது விரிசல்கள் ஏற்படுகின்றன என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் அதை எளிதாக சரி செய்துகொள்ளலாம்.

ட்டுமான அமைப்புகளில் என்ன காரணங்களின் அடிப்படையில் பாதிப்புகள் அல்லது விரிசல்கள் ஏற்படுகின்றன என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் அதை எளிதாக சரி செய்துகொள்ளலாம். அதனால், ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் ஆகிய கால அளவுகளில் கட்டிடத்தின் வெளிப்புற அமைப்புகள் அனைத்தையும் நேரடியாகவோ அல்லது தக்க வல்லுனர்கள் மூலமாகவோ பரிசோதனை செய்து கொள்வது பல வகைகளிலும் பாதுகாப்பானது.

கட்டுமான பாதிப்புகள்

சென்னை போன்ற கடற்கரை நகரங்களில் உள்ள கட்டிடங்கள் உப்பு காற்றின் காரனமாக பாதிக்கப்படுகின்றன. அது தவிரவும்,

* அதிகப்படியான அதிர்வுகளை ஏற்படுத்தும் இயந்திரங்களை கட்டமைப்பின் உட்புறத்தில் அல்லது மேல் தளங்களில் பயன்படுத்துவது, 

* நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடவும் அதிகமான தளங்கள் அமைப்பது, 

* சாதாரண காரணத்தால் எப்போதோ ஏற்பட்ட விரிசலை கண்டு கொள்ளாமல் விடுவது, 

* போக்குவரத்து அதிகமாக உள்ள முக்கிய சாலைக்கு அருகாமையில் குடியிருப்பு அமைந்திருப்பது,

* கட்டிடத்துக்கு அருகில் உள்ள செடி, மரம் ஆகியவற்றின் வேரின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் ஆகிய வெவ்வேறு நிலைகளின் அடிப்படையில் கட்டிடங்கள் பாதிக்கப்படுவதாக கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

பணியாளர் தர நிலை

மேலும், கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கான தரம், அவற்றின் சுத்தம், பயன்பாட்டு அளவு, பணியாளர்களால் பொருட்களை கச்சிதமாக பயன்படுத்தாமல் போவது ஆகிய போன்ற காரணங்களாலும் கட்டிடத்தில் விரிசல்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். அந்த வகையிலான பாதிப்புகளை எப்படி சரி செய்து கொள்வதற்கு முன்னர், அவற்றை நேரடியாக கட்டிட உரிமையாளரே கண்டறியலாம். 

பரிசோதனை அவசியம்

பொதுவாக, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது கட்டுமான அமைப்புகளின் அனைத்து பகுதிகளையும் சுற்றிப் பார்த்து முழுவதுமாக பரிசோதனை செய்ய வேண்டும். அதற்காக நகர்ப்புறங்களில் கட்டுமான பரிசோதனை செய்வதற்கென்று கட்டுமான பொறியியல் வல்லுனர்களை அணுகி ஆலோசனைகளை பெற்று செயல்படுத்தலாம். 

Next Story