கட்டுமான திட்டங்களுக்கு டிடிசிபி அங்கீகாரம்


கட்டுமான  திட்டங்களுக்கு  டிடிசிபி  அங்கீகாரம்
x
தினத்தந்தி 15 Sept 2018 4:45 AM IST (Updated: 14 Sept 2018 4:57 PM IST)
t-max-icont-min-icon

சென்னை பெருநகர எல்லைக்கு வெளிப்புறமாக அமைந்துள்ள, தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு நகர் ஊரமைப்பு இயக்ககம் கட்டுமான திட்டங்களுக்கான அனுமதி அளிக்கிறது.

மனையானது பத்து ஏக்கருக்கும் மேற்பட்டதாக இருந்தால் சென்னை டி.டி.சி.பி அலுவலகத்திலும், அதற்கும் குறைவாக இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட டி.டி.சி.பி அலுவலகத்தில் கட்டுமான அனுமதி பெற வேண்டும்.

லே–அவுட் கிராமப் பகுதியில் இருந்தால், கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தில் பிளானை சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் சரி பார்த்துவிட்டு, மாவட்ட டி.டி.சி.பி. அலுவலகத்துக்கு பிளானை அனுப்பி வைப்பார்கள். அங்கு லே–அவுட் பல்வேறு கட்டங்களில் ஆராய்ந்த பிறகு அனுமதி அளிக்கப்படும்.

பொதுவாக, 24 (கிட்டத்தட்ட கால் ஏக்கர்) செண்டுக்கு குறைவான நிலப்பகுதிகளுக்கு கிராம பஞ்சாயத்து அனுமதி போதுமானது. அந்த நிலத்தின் ஒரு பகுதியை தனியாக வாங்க அல்லது கட்டிடம் கட்ட பஞ்சாயத்து அனுமதி வேண்டும். 24 செண்ட் அளவுக்கு மேற்பட்ட நிலப்பகுதிக்கு லே–அவுட் அப்ரூவல் மற்றும் கட்டுமான திட்டங்களுக்கு டி.டி.சி.பி அங்கீகாரம் அவசியம். 

Next Story