உங்கள் முகவரி

கட்டுமான ஒப்பந்த விபரங்கள் + "||" + Construction contract details

கட்டுமான ஒப்பந்த விபரங்கள்

கட்டுமான ஒப்பந்த விபரங்கள்
கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு முன்னால், கட்டுனர் அல்லது கட்டிட காண்ட்ராக்டருடன் அதற்கான ஒப்பந்தம் செய்து கொள்வது முக்கியம்.
மொத்த பட்ஜெட், கட்டுமான பணிகளுக்கான கால வரையறை, கட்டுமான மூலப்பொருட்கள் மற்றும் கட்டுமான விவரங்கள் மற்றும் பணிகளுக்கான தொகையை எவ்வாறு கொடுப்பது என்பது போன்ற சகல விவரங்களுடன் கூடிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்படுவது முறையாகும். 

தீர்மானிக்கப்பட்ட கால வரையறைக்குள், கட்டுமான பணிகள் முடிவடையவில்லை என்றால் அதற்காக காண்ட்ராக்டர் அல்லது கட்டுனருடைய பொறுப்புகள் மற்றும் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் இரு தரப்பிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ‘அக்ரிமெண்டில்’ விளக்கமாக குறிப்பிடும் பட்சத்தில் பல சிக்கல்களை சுலபமாக எதிர்கொள்ள முடியும்.