வீடுகள் கட்டமைப்பில் தோராயமான மொத்த செலவு


வீடுகள்  கட்டமைப்பில் தோராயமான  மொத்த செலவு
x
தினத்தந்தி 15 Sept 2018 5:45 AM IST (Updated: 14 Sept 2018 5:51 PM IST)
t-max-icont-min-icon

வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டுமான பணிகளில், அதன் மொத்த பரப்புக்கேற்ப எவ்வளவு பட்ஜெட் ஆகலாம் என்பது பற்றி முதலில் கணக்கிடப்படுவது வழக்கம்.

அதன் அடிப்படையில் 1000 சதுரடி அளவு கொண்ட கட்டிட அமைப்புக்கு, இன்றைய சந்தை நிலவரத்தில் தோராயமாக ரூ.12,87,000 செலவு ஆகலாம் என்று கட்டுமானத்துறை வல்லுனர்களால் கணக்கிடப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு சதுரடி கட்டுமானத்துக்கு ரூ.1287 என்பது கணக்கு.

மேற்கண்ட 1000 சதுரடி அளவுள்ள கட்டுமானத்துக்கான மொத்த செலவில் பணியாளர் ஊதியம் என்ற நிலையில் தோராயமாக ரூ.3,86,100அளிக்கப்பட வேண்டியதாக இருக்கலாம்.

ஒரு சதுரடி கட்டுமான அமைப்புக்கு பணியாளர் ஊதியம் என்ற கணக்கில் ரூ.386 கொடுக்க வேண்டும்.

மேற்கண்ட செலவுகளுக்கான கணக்கீடுகள், கட்டுமான பொருட்களின் பயன்பாடு, தொழில்நுட்ப அணுகுமுறை மற்றும் சம்பந்தப்பட்ட ஏரியா உள்ளிட்ட இதர காரணங்களின் அடிப்படையில் கூடுதலாக ஆகலாம் என்பது கவனிக்கத்தக்கது. 

Next Story