மனை அமைப்பில் கவனிக்க வேண்டிய வாஸ்து குறிப்புகள்


மனை   அமைப்பில்  கவனிக்க   வேண்டிய  வாஸ்து  குறிப்புகள்
x
தினத்தந்தி 21 Sep 2018 10:30 PM GMT (Updated: 21 Sep 2018 10:39 AM GMT)

வீட்டுமனை அல்லது இடங்களை வாங்கும்போது பலரும் அவை வாஸ்து ரீதியாக அமைந்திருப்பதை உறுதி செய்து கொள்கிறார்கள்.

வீட்டுமனை அல்லது இடங்களை வாங்கும்போது பலரும் அவை வாஸ்து ரீதியாக அமைந்திருப்பதை உறுதி செய்து கொள்கிறார்கள். பொதுவாக, மனைகள் வாங்கும்போது வாஸ்து சொல்லும் விதிமுறைகள் அனைத்தையும் கவனத்தில் கொள்வது சற்று சிரமமாக இருக்கும். அதன் அடிப்படையில் வாஸ்து நிபுணர்கள் தரக்கூடிய சில முக்கியமான தகவல்களை இங்கே காணலாம்.

ஈசானிய பகுதி அமைப்பு

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களிலும், தனுசு, மீனம் ஆகிய ராசிகளிலும் பிறந்தவர்கள் தங்களுக்கு சொந்தமாக வீட்டுமனை வாங்கும்போது கண்டிப்பாக மனையின் ஈசானியமான, வடகிழக்கில் வலுவான கட்டிட அமைப்புகள் அல்லது எளிதில் சரி செய்ய இயலாத உயரமான அமைப்பு ஆகியவை இருந்தால் அந்த மனையை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.  

கவனிக்க வேண்டிய நைருதி 

திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் நைருதி பாகமான, தென்மேற்கில் கிணறு அல்லது எளிதில் சரி செய்ய இயலாத பள்ளங்கள் உள்ள மனை அல்லது பூமியை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. 

பிரம்மஸ்தான பகுதி

மேலே குறிப்பிட்ட நான்கு பாகங்களை கவனிப்பதுடன், மனையின் மைய பகுதியான பிரம்மஸ்தானத்தின் அமைப்பையும் மனதில் கொள்ள வேண்டும். அந்த பகுதியில் பள்ளங்கள் அல்லது மேடுகள் இருப்பது கூடாது. ஒருவேளை அப்படி இருந்தாலும் வாஸ்து ரீதியாக அதை சரி செய்து கொள்ள இயலும் பட்சத்தில் அந்த மனையை வாங்குவது பற்றி முடிவு செய்யலாம். 

மனையின் ஐந்து தத்துவங்கள்

மனையின் நில தத்துவமான நைருதி, நீர் தத்துவமான ஈசானியம், நெருப்பு தத்துவமான ஆக்கினேயம், காற்று தத்துவமான வாயவியம், ஆகாய தத்துவமான பிரம்மஸ்தானம் ஆகிய ஐந்து பாகங்களும் சரியான அமைப்பில் உள்ள இடத்தை தேர்வு செய்வதுதான் நன்மைகளை அளிக்கும். மனையின் அமைப்பு அவ்வாறு இல்லாத நிலையில் தக்க தொழில்நுட்ப ஆலோசனைகளின்படி அவற்றை சரி செய்யும் வாய்ப்புகள் இருந்தால் சம்பந்தப்பட்ட மனையை வாங்குவது பற்றி முடிவெடுக்கலாம். 

Next Story