கழிவறை பராமரிப்பில் நுண்ணுயிரி தொழில்நுட்பம்


கழிவறை பராமரிப்பில் நுண்ணுயிரி தொழில்நுட்பம்
x
தினத்தந்தி 22 Sept 2018 3:00 AM IST (Updated: 21 Sept 2018 4:14 PM IST)
t-max-icont-min-icon

குதிரை சாணத்தில் உருவாகும் நன்மை செய்யும் ‘பேசில்லஸ்’ பாக்டீரியா வகைகளை கழிவறை தொட்டிகளில் போட்டு, அதன் சுத்திகரிப்பு வேலைகளை தாமாக செய்து கொள்ளும் தொழில்நுட்பம் மேலை நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.

குதிரை சாணத்தில் உருவாகும் நன்மை செய்யும் ‘பேசில்லஸ்’ பாக்டீரியா வகைகளை கழிவறை தொட்டிகளில் போட்டு, அதன் சுத்திகரிப்பு வேலைகளை தாமாக செய்து கொள்ளும் தொழில்நுட்பம் மேலை நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது. அதனால் 3 அல்லது 4 வருடங்களுக்கு ஒரு முறை ‘செப்டிக் டேங்க்’ சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.

குறிப்பாக, 5 நபர்கள் கொண்ட குடும்பத்தின் கழிவறை தொட்டியில் 100 கிராம் அளவில் ‘பேசில்லஸ் பாக்டீரியாவை’ போட்டுவிட்டால், தொட்டிகளில் உருவாகும் தீமை செய்யும் பாக்டீரியாக்களை அவை சாப்பிட்டு, பெருகக்கூடியவை என்பதால் அவற்றை அடிக்கடி தொட்டியில் போட வேண்டியதில்லை.

Next Story