வெளிநாடுகளுக்கு கட்டுமான பொருட்கள் ஏற்றுமதி


வெளிநாடுகளுக்கு  கட்டுமான பொருட்கள்  ஏற்றுமதி
x
தினத்தந்தி 22 Sept 2018 4:00 AM IST (Updated: 21 Sept 2018 4:22 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிலிருந்து சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல் ஆகிய துறைகளை சார்ந்த கட்டுமான பொருட்கள் உலக நாடுகளுக்கு குறிப்பிட்ட அளவில்தான் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

ந்தியாவிலிருந்து சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல் ஆகிய துறைகளை சார்ந்த கட்டுமான பொருட்கள் உலக நாடுகளுக்கு குறிப்பிட்ட அளவில்தான் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இப்போதைய நிலையில், ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் சில இதர நாடுகள் ஆகியவற்றுக்கு நமது கட்டுமான பொருட்கள் குறிப்பிட்ட அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு 

கட்டுமான பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா ஏறுமுகத்தில் இருந்து வருவதாக சம்பந்தப்பட்ட தொழில் முனைவோர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சென்ற பத்து வருடங்களில் கட்டுமான பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி பெற்ற நிலையில் ஏற்று மதியாளர்களுக்கு ஏற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், படித்த இளைஞர்களுக்கும் நல்ல வாய்ப்புகளும் உருவாகியிருப்பதாகவும் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மத்திய அரசின் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் (
Federation of Indian Export Organisations-FIEO
) மூலம் உரிமம் பெற்று, ஏற்றுமதிக்கான அரசின் இதர நடைமுறைகளையும் அறிந்து ஏற்றுமதியை தொழிலாக மேற்கொள்ளலாம்.  

பல்வேறு பொருட்கள்

கட்டுமான பொறியியல் பொருட்கள், கட்டுமான உபகரணங்கள், கதவுகள், ஜன்னல் கதவுகள், கழிவறை உபகரணங்கள், பிளாஸ்டிக் மற்றும் மெட்டல் பம்பு வகைகள், இரும்பு கம்பிகள், இரும்பு தகடுகள், கட்டுமான இயந்திரங்கள், மார்பிள், கிரானைட் மற்றும் டைல்ஸ் வகைகள், கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை (மணல், சிமெண்டு, கருங்கல், ஜல்லி, செங்கல் தவிர)அரசின் வழிகாட்டுதல்களுக்கேற்ப ஏற்றுமதி செய்ய இயலும். 

கட்டுமான பொருட்களுக்கான தேவை

உலக நாடுகளில் கட்டுமான பொருட்களுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருவதன் அடிப்படையில் உலக நாடுகள் சீனாவை நாடுகின்றன. நமக்குப் போட்டி நாடாக உள்ள சீனா பல ஆண்டுகளாக அதிக அளவில் கட்டுமான பொருட்களை ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.  

சிறந்த வாய்ப்பு

வரும் காலங்களில் ஸ்பெயின், ரஷியா, அமெரிக்கா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் கட்டுமான பொருட்களின் தேவை அதிகரிக்கும் என்ற நிலையில், இந்திய கட்டுமான பொருட்களின் ஏற்றுமதி அதிகமாவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளதாகவும் ஏற்றுமதி சம்பந்தப்பட்ட தொழில் முனைவோர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story