அரசு வீட்டு வசதி திட்டத்தில் கூடுதல் சலுகைகள்


அரசு  வீட்டு  வசதி  திட்டத்தில்  கூடுதல்  சலுகைகள்
x
தினத்தந்தி 22 Sept 2018 4:30 AM IST (Updated: 21 Sept 2018 4:59 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் வீட்டு வசதி திட்டம் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் நிலையில் பல்வேறு தரப்பட்ட பயனாளர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு கட்டுமான அமைப்புகளுக்கான பரப்பளவில் இரண்டு முறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் வீட்டு வசதி திட்டம் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் நிலையில் பல்வேறு தரப்பட்ட பயனாளர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு கட்டுமான அமைப்புகளுக்கான பரப்பளவில் இரண்டு முறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

திட்ட விரிவாக்கம்

மேற்கண்ட திட்டத்தின் கீழ் மேலும் அதிகமானோர் பயன்பெறும் வகையில் சமீபத்தில் அரசு வீட்டு வசதி திட்டத்தில் விரிவாக்கம் செய்துள்ளதோடு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அதற்கான வட்டி சலுகையை அதிகரித்தும் அறிவிப்பு செய்திருக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள அளவை விடவும் 33 சதவீதம் அதிக பரப்பளவு கொண்ட வீடுகளுக்கும், வட்டியில் சலுகை அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நகர்ப்புற மனை அளவுகள்

நகரம் மற்றும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள பல வீட்டு மனைகளின் பரப்பளவு அதிகமாக உள்ள காரணத்தால் இந்த திட்டம் மூலம் சலுகைகள் பெறும் வாய்ப்பு பெரும்பாலானோருக்கு கிடைக்காமல் இருந்தது. அதன் அடிப்படையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம், மத்திய அரசின் அனுமதியுடன் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. 

வீட்டின் பரப்பளவு கூடுதல்

அந்த திட்டத்தின் அடிப்படையில் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் மற்றும் ரூ. 18 லட்சம் பெறுபவர்கள் முந்தைய பரப்பளவை விடவும் குறிப்பிட்ட அளவு அதிகமான பரப்பு கொண்ட வீடுகளை கட்டுவது அல்லது வாங்குவது ஆகியவற்றின் மூலம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வட்டி சலுகை பெறலாம். மேலும், இந்த திட்டத்தை கூடுதலாக 3–ம், 4–ம் தர வரிசை கொண்ட (
3Tier, 4Tier Cities
) நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யவும் அரசு ஆலோசித்து வருகிறது.   

வருமான அடிப்படையில் நான்கு பிரிவுகள்

மத்திய அரசின் வீட்டு வசதி திட்டத்தில் கடன் மானியம் பெறுவதற்கு, ஒருவரது ஆண்டு வருமானத்தை அடிப்படையாக வைத்து நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது, 

1) பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்கள் (Economically Weaker Section  - EWS)

2) குறைந்த அளவு வருமானம் பெறுபவர்கள்(Light Income Group  -LIG)

3) நடுத்தர வருமானம் பெறுபவர்கள்–1  (Medium Income Group  - MIG1)

4) நடுத்தர வருமானம் பெறுபவர்கள்–2  (
Medium Income 
Group  - MIG2) 

ஆகிய நான்கு பிரிவுகள் உள்ளன. 

* ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை கொண்டவர்கள் (ணிகீஷி) 323 சதுரடி மற்றும் ரூ. 6 லட்சம் வரை கொண்டவர்கள் (லிமிநி) 645 சதுரடி அளவு கொண்ட புதிய வீடு வாங்கும்போது, அதிகபட்சம் ரூ. 2.67 லட்சம் மானியம் பெறலாம்.

* ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை உள்ளவர்கள் (விமிநி1) 1,722 சதுர அடி வீட்டுக்கு 2.35 லட்சம் வரை மானியம் பெறலாம். முன்னர் 1291 சதுர அடியாக இருந்த வீட்டின் பரப்பளவு இப்போது அதிகமாக்கப்பட்டுள்ளது.

* ஆண்டு வருமானம் ரூ.18 லட்சம் வரை பெறுபவர்கள் (விமிநி2) 2153 சதுர அடி வீட்டுக்கு, அதிகபட்சமாக 2.30 லட்சம் வரை மானியம் பெறலாம். முன்னதாக 1614 சதுர அடியாக இருந்த வீட்டின் பரப்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. 

* பெற்றோருடன் அவர்களது ஆதரவில் கூட்டுக்குடும்பமாக வசிக்கும் 23 வயது கொண்ட ஆண் அல்லது பெண் அவர்களது சொந்த வருமானத்தில் புதிய வீடு வாங்கும் பட்சத்தில் அவர்களும் மானியம் பெற இயலும்.

Next Story