அறைகளை அழகு செய்ய எளிய வழிமுறைகள்


அறைகளை  அழகு  செய்ய  எளிய   வழிமுறைகள்
x
தினத்தந்தி 21 Sep 2018 11:00 PM GMT (Updated: 21 Sep 2018 11:31 AM GMT)

அன்றாட பணிகள் முடிந்து களைப்பாக வீட்டுக்குள் நுழையும்போது அமைதியும், மகிழ்ச்சியும் இருக்க வேண்டும் என்பது அனைவரது விருப்பமாகும்.

ன்றாட பணிகள் முடிந்து களைப்பாக வீட்டுக்குள் நுழையும்போது அமைதியும், மகிழ்ச்சியும் இருக்க வேண்டும் என்பது அனைவரது விருப்பமாகும். சொந்த வீடே சொர்க்கம் என்ற கருத்தின் அடிப்படையில் வீடுகளில் உள்ள அறைகளில் சில எளிதான மாற்றங்களை செய்து மனதிற்கு உகந்த அமைதியான சூழலை ஏற்படுத்தலாம் என்று உள் கட்டமைப்பு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அனைவரும் சுலபமாக கடைப்பிடிக்கும் விதத்தில் அவர்கள் தரும் கருத்துக்களை இங்கே காணலாம்.  

அறைகள் அலங்காரம்

பல்வேறு உலக நாடுகளில் அவரவர் குடும்ப வழக்கத்திற்கேற்ப தனித்தன்மையான ‘தீம்’ அடிப்படையில் வீடுகள் அல்லது அறைகளை அலங்கரிப்பது பொதுவானது. ஆனால், வீட்டில் உள்ள அனைத்து அறைகளையும் ஒரே விதமாக அலங்கரிப்பது அவ்வளவு அழகாக அமைவதில்லை. 

வீட்டின் வரவேற்பறை

வீட்டின் முதல் அறையான வரவேற்பறையில் இருக்கை அமைப்பு மற்றும் அதன் வசதிகள் ஆகியவற்றை வித்தியாசமான வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் மனதுக்கு உற்சாகம் அளிக்கும். வரவேற்பறை மற்றும் உணவு அறைகளில் பசுமையான செடிகளை தொட்டியில் வளர்ப்பதன் காரணமாக மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் ஆகியவை குறைவதாக அறியப்பட்டுள்ளது.

இயற்கை வெளிச்சம்

அறைகளின் ஜன்னல் அளவுக்கேற்ற திரைகளை பொருத்தி, இயற்கை வெளிச்சம் எளிதாக உள்ளே வருவதுபோல் அமைப்பதோடு, தேவையான இடங்களில் மின் விளக்குகளை மிதமான வெளிச்சம் தரும்படியாகவும் அமைத்து புதுமையான அழகை கொண்டு வரலாம்.

சமையலறைகள் வெளிச்சமாகவும், காற்றோட்டமாகவும் இருக்கவேண்டும். மின் விளக்கு எவ்வளவு அழகாக இருந்தாலும், சூரிய வெளிச்சம் அல்லது இயற்கை வெளிச்சம் சமையலறைக்குள் வருவது நல்லது.

நேர்மறை அதிர்வுகள்

பொருட்களை அழகாக வைப்பதற்கு அறைகளின் ‘கார்னர்’ பகுதிகளை திட்டமிட்டு பயன்படுத்தலாம். குறிப்பாக, அறைகளின் ஒழுங்கான தன்மையால் உருவாகும் நேர்மறை அதிர்வுகள் உடல் மற்றும் மனதுக்கு நன்மை அளிப்பதாக தெரிய வந்துள்ளது. வீடுகளில் அதிகமாக பயன்படுத்தப்படாத பொருட் களை மரப்பெட்டிகள் அல்லது மூங்கில் கூடை ஆகியவற்றில் போட்டு அறைகளின் தென்மேற்கு பகுதியில் வைக்கலாம்.

காலியாக உள்ள இடம்

இயன்ற அளவுக்கு வீட்டில் காலி இடம் இருப்பதும் ஒருவித அழகை ஏற்படுத்தும். அதாவது, அறைகளுக்கான இட மேலாண்மை அடிப்படையில் பொருள் களை அளவாக வைத்திருப்பது வீட்டின் அழகை மேம்படுத்தும்.

பழங்கால பொருட்கள்

அலமாரிகள், சுவர்கள் ஆகியவற்றில் ‘ஆன்டிக்’ வகையான பழங்கால ஆபரணங்கள், பொருட்கள், ஓவியங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அலங்கரிக்கும்போது, அந்த இடங்கள் தனிப்பட்ட அழகுடன் இருக்கும். குறிப்பாக, படுக்கையறையில் மனம் கவர்ந்த ‘ஆன்டிக்’ பொருட்கள் இருப்பது ஒரு வகை அமைதியை உண்டாக்குவதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story