கான்கிரீட் தரைத்தளத்தை உறுதியாக்கும் ரசாயனம்


கான்கிரீட் தரைத்தளத்தை உறுதியாக்கும் ரசாயனம்
x
தினத்தந்தி 29 Sep 2018 5:29 AM GMT (Updated: 29 Sep 2018 5:29 AM GMT)

குடியிருப்புகள் உள்ளிட்ட இதர கட்டுமானங்களின் பல இடங்கள் கான்கிரீட் தரையாக விடப்பட வேண்டிய சூழலில் அதன் உறுதியை கவனத்தில் கொண்டு தரைத்தள அமைப்பை மேற்கொள்ள வேண்டும்.

கான்கிரீட் தரைத்தளத்தின் உறுதிக்கு ‘ஹார்டனர்கள்’ என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. துகள் மற்றும் திரவம் ஆகிய வடிவத்தில் சந்தையில் கிடைக்கும் அவற்றை சிமெண்டுடன் கலந்து பயன்படுத்தும்போது கலவை ரசாயன மாற்றமடைந்து, அதன் மேற்பரப்பு உறுதி கொண்டதாக மாற்றம் அடையச்செய்கிறது.

அதன் காரணமாக, தரையானது வழுக்கும் தன்மை இல்லாமலும், கீறல்கள் விழாமல், பராமரிக்க சுலபமாகவும் இருக்கும். மேலும், அதற்கான பராமரிப்பு பணிகளும் குறைவாக இருப்பதும் கவனிக்கத்தக்கது.

Next Story