முத்திரை தாள் கட்டணம் குறித்த தகவல்கள்


முத்திரை  தாள்  கட்டணம் குறித்த  தகவல்கள்
x
தினத்தந்தி 6 Oct 2018 3:00 AM IST (Updated: 5 Oct 2018 3:28 PM IST)
t-max-icont-min-icon

அரசு பத்திரப்பதிவு துறையின் இணைய தளத்தில் சொத்து மற்றும் குறிப்பிட்ட தன்மை கொண்ட ஆவணம் ஆகியவற்றிற்கு முத்திரை தீர்வை என்ற முத்திரை தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் உள்ளிட்ட இதர விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ரசு பத்திரப்பதிவு துறையின் இணைய தளத்தில் சொத்து மற்றும் குறிப்பிட்ட தன்மை கொண்ட ஆவணம் ஆகியவற்றிற்கு முத்திரை தீர்வை என்ற முத்திரை தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் உள்ளிட்ட இதர விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பதிவுத்துறை இணைய தளம்

சம்பந்தப்பட்ட சொத்து தொடர்பான வழிகாட்டி மதிப்பு, கட்டிடம் இருப்பின் பொதுப்பணித்துறையால் வழங்கப்பட்ட கட்டிட மதிப்பீடு, செலுத்தப்பட வேண்டிய முத்திரை தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட சார்–பதிவாளர் அல்லது பதிவுத்துறை இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வங்கி மூலம் கட்டணம் 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை பொறுத்து மின்னணு முத்திரை வசதி மற்றும் அந்த சேவையை வழங்கக்

கூடிய வங்கி கிளைகள் பற்றிய விவரங்களையும் மேற்கண்ட இணையதளம் மூலம் அறியலாம்.

விற்பனையாளர் பட்டியல்

முத்திரைத்தாள் வாங்க வசதியாக சம்பந்தப்பட்ட பகுதி சார்–பதிவாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட முத்திரைத்தாள் விற்பனையாளர் பட்டியல் பதிவு அலுவலக விளம்பர பலகையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

* முத்திரைத் தாள்கள் சார்–பதிவாளர், கருவூல அலுவலகங்கள் மற்றும் உதவி கண்காணிப்பாளர் (முத்திரை) சென்னை ஆகியோரால் விற்பனை செய்யப்படுகிறது.

* முத்திரைத் தாள்களை அதன் மதிப்பிற்கு சமமான பண மதிப்பை மட்டும் அளித்து பெற்றுக்கொள்ளவேண்டும்.

* முத்திரை கட்டணத்தை சார்–பதிவாளரிடம் ரூ. 1000 வரையில் ரொக்கமாக செலுத்தலாம். மீதம் உள்ள தொகை எவ்வளவு இருந்தாலும் வங்கி வரைவோலை அல்லது கருவூல செலுத்து சீட்டு மூலமாக செலுத்த வேண்டும்.

* முத்திரை தீர்வை உள்ளிட்ட இதர கட்டணங்களை செலுத்துவதற்காக 11 வங்கிகள் இணைக்கப்பட்டு, அவற்றின் இணைய தளம் மூலமாக பணம் செலுத்த இயலும். 

* சரியான அல்லது குறைவு முத்திரை தாள் கட்டணத்தை ரொக்கம், வரைவோலை அல்லது இணையம் வழியாக செலுத்தப்படும் நிலையில் இந்திய முத்திரை சட்டம் பிரிவு 41–ன் கீழ் உரிய விண்ணப்பத்துடன் தாக்கல் செய்யவேண்டும்.

Next Story