கட்டிட மதிப்பை நிர்ணயிக்கும் கள ஆய்வு
குறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ள வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்புக்கான ஆவணம் பதிவு செய்யப்படும்போது, சார்-பதிவாளர் சம்பந்தப்பட்ட கட்டிடத்தை நேரடியாக கள ஆய்வு செய்து மதிப்பினை நிர்ணயம் செய்வது வழக்கம்.
சார்பதிவாளர் கணக்கிட்ட கட்டிடத்தின் மதிப்பானது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள கட்டிட மதிப்பைவிட அதிகமாக இருக்கும் பட்சத்தில், குறைவு முத்திரை தீர்வை மற்றும் குறைவு பதிவு கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும்.
கட்டிடத்தின் மதிப்பு ரூ. 25 லட்சத்திற்கும் அதிகமாக இருப்பது, சிறப்பு வகை கட்டிடங்கள் மற்றும் இயந்திர தளவாட பொருட்கள் உள்ள கட்டிட அமைப்புகள் ஆகியவற்றை பதிவு துறைக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட உதவி செயற்பொறியாளர் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கட்டிட மதிப்பு ரூ.2 லட்சத்திற்கு குறைவாகவும், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கட்டிட மதிப்பு ரூ. 1 லட்சத்திற்கு குறைவாகவும் இருக்கும் பத்திரங்கள் சம்பந்தப்பட்ட கட்டிட கள ஆய்வு மேற்கொள்ளப்படுவது இல்லை.
Related Tags :
Next Story