வானுயர் கட்டுமானங்கள் வலிமைக்கு ‘மைக்ரோ சிலிக்கா’


வானுயர் கட்டுமானங்கள் வலிமைக்கு ‘மைக்ரோ சிலிக்கா’
x
தினத்தந்தி 13 Oct 2018 3:08 PM IST (Updated: 13 Oct 2018 3:08 PM IST)
t-max-icont-min-icon

கான்கிரீட் கொண்டு அமைக்கப்படும் உயரமான கட்டிடங்களில் கண்ணுக்கு தெரியாத ‘மைக்ரோபோர்ஸ்’ என்ற நுண் துளைகள் காரணமாக கம்பிகளில் அரிப்பு ஏற்படுகிறது.

அதை தவிர்க்க, பல நாடுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட் டதன் அடிப்படையில் கண்டறியப்பட்ட பொருள் ‘ரீ-இன்போர்ஸ்டு பைபர்’ அமைந்துள்ள வலிமையான ‘மைக்ரோசிலிக்கா’ஆகும்.

ஒரு கிலோகிராம் ‘மைக்ரோ சிலிக்காவில்’ லட்சக்கணக்கான ‘பைபர் ரீ-இன்போர்ஸ்டு’ மூலக்கூறுகள் உள்ளதால், கட்டிட நீராற்றல் செய்யும்போது நுண்ணிய சுருக்க விரிசல்கள் ஏற்படாமல் கட்டிடம் பாதுகாக்கப்படுகிறது. 

மேலும், கான்கிரீட் கலவைகளில் உள்ள மூலப்பொருட்களை வலிமையாக இணைப்பதன் மூலம் கான்கிரீட் அமைப்புகளின் வளைவுத் திறன், அமுக்கத் திறன் மற்றும் இழுவிசைத் திறன் ஆகியவற்றை அதிகரிக்கவும் உதவுகிறது. 

Next Story