குழாய்கள் அமைப்பில் பல நிறங்கள்


குழாய்கள் அமைப்பில் பல நிறங்கள்
x
தினத்தந்தி 13 Oct 2018 10:07 AM GMT (Updated: 13 Oct 2018 10:07 AM GMT)

வளர்ந்த மேலை நாடுகளில் குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளின்போது பொருத்தப்படும் குழாய்கள் வெவ்வேறு நிறங்களில் அமைந்திருக்கும்.

அதாவது, சமையல் எரிவாயு சப்ளை செய்ய பயன்படுத்தப்படும் குழாய்கள் மஞ்சள் நிறமாக இருக்கும்.

மின் இணைப்பு சாதனங்களுக்கான கேபிள்கள் அல்லது ஒயர் வகைகளை எடுத்து செல்ல கறுப்பு நிறம் கொண்ட குழாய்கள் பயன்படுத்தப்படும்.

குளியலறையில் சுடுநீர் எடுத்துச்செல்லும் குழாய்களை சிவப்பு நிறம் கொண்டதாக பொருத்தி இருப்பார்கள்.

மேற்கண்ட வழிமுறையை நமது பகுதிகளிலும் மேற்கொண்டால் பல நிலைகளில் நன்மை தருவதாக இருப்பதுடன், அவற்றின் பராமரிப்பு உள்ளிட்ட வெவ்வேறு பணிகளில் கச்சிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வசதியாக இருக்கும். 

Next Story