குடியிருப்புகளில் பயன்படும் காற்று சுத்திகரிப்பு கருவிகள்
சுற்றுப்புற காற்று மண்டலத்தில் உள்ள பாக்டீரியா, வைரஸ், ‘டஸ்ட் மைட்ஸ்’, ‘அலர்ஜென்ஸ்’, ‘பங்கஸ் ஸ்போர்ஸ்’ மற்றும் ‘வி.ஓ.சி’ எனப்படும் கரிமான சேர்மங்கள் ஆகிய நுண் கிருமிகள் நாம் சுவாசிக்கும் காற்றின் வழியாக உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது.
வீடுகளுக்குள் காற்று மாசு
குடியிருப்புகளில் இருக்கும் மின் சாதனங்கள் உள்ளிட்ட இதர கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் வீட்டுக்குள் உருவாகும் காற்று மாசு குடியிருப்போரின் கவனத்திற்கு வராத பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்துவதாகவும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வீடுகளுக்குள் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தவும், சுவாசக் கோளாறுகள் இருப்பவர்களுக்கு பயன்தரக்கூடிய வகையிலும் காற்றை சுத்திகரிக்கும் கருவிகள் உலக நாடுகளில் உபயோகத்தில் உள்ளன. அவற்றில் சில வகைகள் நமது நாட்டிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஹோல் ஹவுஸ் ஏர் பியூரிபையர்’
வீட்டின் அனைத்து அறைகளுக்கும் பாதுகாப்பாக செயல்படும் இவற்றை கச்சிதமாக தேர்ந்தெடுத்து வீட்டில் பொருத்த வேண்டும். மின்சாரத்தால் இயங்கக்கூடிய இந்த கருவி சுவாச கோளாறுகள் உள்ளவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
‘போர்ட்டபிள் ஏர் பியூரிபையர்’
இவ்வகை காற்று சுத்திகரிக்கும் கருவிகள் குறிப்பிட்ட அறைக்குள் மட்டும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டவை. அவற்றில் உள்ளே இருக்கும் ‘பில்டர்கள்’ அறையில் உள்ள கண்களுக்கு புலப்படாத தூசி துரும்புகளை வடிகட்டும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.
‘கார்பன் பில்டர்’
நுண்கிருமிகளோடு, கெட்ட வாசனைகளையும் ஈர்த்துக்கொள்ளும் விதமாக இவ்வகை பில்டர்கள் செயல்படுகின்றன. இவை ‘வி.ஓ.சி’ எனப்படும் ‘வோலாட்டில் ஆர்கானிக் காம்பவுண்ட்ஸ்’ என்ற ரசாயனத்தை உறிஞ்சிக்கொள்கின்றன.
‘ஏர் அயானைஸர்’
இந்த முறையானது, காற்றில் மிதந்து கொண்டிருக்கும் தூசி மண்டலத்தில் உள்ள நுண்ணிய துகள்களை, எதிர் அயனிகளை வெளிப்படுத்தி மூலம் ஈர்த்துக்கொள்ளும் அறிவியல் தொழில் நுட்பமாகும். இதில் உள்ள சிறிய அளவு கொண்ட ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ ஊசி முனைகள் மூலம் ‘எதிர் அயனிகள்’ உற்பத்தி செய்து, நுண் துகள்களை உறிஞ்சிக்கொள்கின்றன.
‘ஹெபா’ பில்டர்ஸ்
‘ஹை–எபிசியன்ஸி பார்டிகுலேட் அரஸ்டிங்’ என்ற அமைப்பில் ‘வாக்குவம் கிளீனர்களில்’ இவ்வகை அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் இவற்றின் உட்புறம் உள்ள நுண்ணிய கம்பி வலைகள் தூசிகளை ஈர்த்துக்கொள்கின்றன.
இதர வகைகள்
மேற்கண்டவை தவிர ‘எலெக்ட்ரோஸ்டாடிக் பிரிசிபிடேட்டர்ஸ்’, ‘சார்ஜ்டு மீடியா பில்ட்டர்ஸ்’ மற்றும் ‘ஆன்டி–பாக்டீரியல் மற்றும் ஜெர்மிசிடல் பில்டர்ஸ்’ எனப்படும் சகலவிதமான நச்சு வாயுக்களையும் உறிஞ்சக்கூடிய வெவ்வேறு ‘பில்டர்’ வகைகளும் உலக நாடுகளின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
Related Tags :
Next Story