உங்கள் முகவரி

மனை அமைப்புக்கேற்ப வாஸ்து குறிப்பிடும் பெயர்கள் + "||" + The names of the land belong to the Vastu

மனை அமைப்புக்கேற்ப வாஸ்து குறிப்பிடும் பெயர்கள்

மனை அமைப்புக்கேற்ப வாஸ்து குறிப்பிடும் பெயர்கள்
வாஸ்து சாஸ்திர ரீதியாக அஷ்ட திக்கு பாலர்கள் என்ற திசை நாயகர்களுக்கு நான்கு பிரதான திசைகள் மற்றும் நான்கு கோண திசைகள் ஆகிய எட்டு பாகங்களும் பிரித்து அளிக்கப்பட்டிருக்கின்றன.
அதன் அடிப்படையில், எட்டு திசை அமைப்புகளின் பலன்களை குறிப்பிடும்படி அவற்றிற்கான பெயர்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, சம்பந்தப்பட்ட இடம் அல்லது மனை ஆகியவற்றின் அம்சம் எப்படிப்பட்டது என்பதை சொல்லும் வகையில் அமைந்துள்ள பெயர்கள் சொல்லும் தகவல்கள் பற்றி இங்கே காணலாம்.

கோ வீதி

மனை அல்லது குறிப்பிட்ட இடத்தின் கிழக்கு பகுதி தாழ்வாகவும், மேற்கு பகுதி உயரமாகவும் அமைந்திருந்தால் அது காமதேனுவின் அம்சம் கொண்ட ‘கோ வீதி’ என்று சொல்லப்படும். அந்த இடத்தில் அமைக்கப்படும் வீடுகளின் வளர்ச்சி பல நிலைகளில் இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.

கஜ வீதி

தெற்கு பகுதி உயரமாகவும், வடக்கு பகுதி தாழ்வாகவும் அமைந்துள்ள நிலப்பகுதி ஐராவத அம்சம் கொண்ட ‘கஜ வீதி’ என்று சொல்லப்படும். அப்படிப்பட்ட இடத்தில் அமைந்துள்ள வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகள் பொருளாதார நலன்களை அளிக்கும் என்று சொல்லப்படுகிறது.

தானிய வீதி

நைருதி மூலை (தென்மேற்கு) உயரமாகவும், ஈசானிய மூலை (வடகிழக்கு) பள்ளமாகவும் உள்ள நிலப்பகுதி தானிய அம்சம் கொண்ட வீதியாக குறிப்பிடப்படுகிறது. வீடுகள், குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான அமைப்புகளுக்கு அந்த இடம் உகந்ததாகும்.

அக்னி வீதி

வடமேற்கு மூலை (வாயவியம்) உயரமாக அமைந்து, தென்கிழக்கு மூலை (ஆக்கினேயம்) தாழ்வாகவும் அமைந்துள்ள நிலப்பகுதி அக்னியின் சுபாம்சம் பெற்றுள்ள நிலையில் அக்னி வீதி என்று பெயர் பெறுகிறது. அந்த இடத்தில் வீடுகளை அமைக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஜல வீதி

மனையின் கிழக்கு பாகம் உயரமாகவும், மேற்கு பாகம் பள்ளமாகவும் அமைந்திருப்பது ஜல வீதி அல்லது வருண வீதி என்றும், அப்படிப்பட்ட மனையில் வீடுகள் அமைப்பது சுப பலன்களை விருத்தி செய்வதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எம வீதி

குபேர திக்கான வடக்கு பாகம் உயரமாக அமைந்து, எம திக்கான தெற்கு பாகம் பள்ளமாக அமைந்துள்ள மனை யம வீதி என்றும், அத்தகைய மனையில் வீடுகள் அமைத்து வசிப்பது நன்மைகளை அளிப்பதில்லை என்று சொல்லப்பட்டுள்ளது.

பூத வீதி

வடகிழக்கான ஈசானிய மூலை மேடாகவும், தென்மேற்கான நைருதி மூலை பள்ளமாகவும் உள்ள மனை அல்லது இடம் நைருதி என்ற பூத அம்சம் கொண்ட வீதி என்றும், அத்தகைய மனை அல்லது இடங்கள் வீடுகள் அமைக்க ஏற்றதல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாக வீதி

தென்கிழக்கு மூலை (ஆக்கினேயம்) உயரமான அமைப்பிலும், வடமேற்கு மூலை (வாயவியம்) பள்ளமான அமைப்பிலும் இருந்தால் அது நாக அம்சம் கொண்ட வீதி என்றும், அப்படிப்பட்ட இடங்களில் வீடுகள் அமைத்து வசிப்பது பல்வேறு சிக்கல்களை உண்டாக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. முகவரி கேட்பதுபோல் நடித்து பெண்ணை மிரட்டி 3 பவுன் தாலி செயின் பறிப்பு - சிறுவன் உள்பட 2 பேர் கைது
வேலூரில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் முகவரி கேட்பதுபோன்று நடித்து, அவரை கொன்றுவிடுவதாக மிரட்டி 3 பவுன் தாலி செயினை பறித்துச்சென்ற சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...