ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்கான நிதி ஆலோசனைகள்


ரியல்  எஸ்டேட்  முதலீடுகளுக்கான நிதி  ஆலோசனைகள்
x
தினத்தந்தி 3 Nov 2018 5:00 AM IST (Updated: 2 Nov 2018 4:50 PM IST)
t-max-icont-min-icon

வங்கிகள் அளிக்கும் சலுகைகள் மூலம் நிதி உதவி பெற்று வாங்கியவுடன் குடியேறும் நிலையில் வீடுகள் கிடைப்பதும் பலரது ஆர்வத்தை அதிகமாக்கி இருக்கிறது.

நிலம், தனி வீடு, அபார்ட்மென்டு போன்ற ரியல் எஸ்டேட் முதலீடுகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் அமைந்துள்ள பகுதிகள் அல்லது அந்த நகரங்களின் வளர்ச்சி, எதிர்கால மதிப்பு மற்றும் மறு விற்பனை ஆகிய பல்வேறு நிதி சார்ந்த வி‌ஷயங்களை கவனத்தில் கொண்டு முதலீடு செய்வது அவசியம் என்று நிதி ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மூன்று வித முதலீட்டாளர்கள்

சுற்றுப்புற வசதிகள், வாடிக்கையாளரின் சொந்த தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வீடு, வீட்டுமனை அல்லது நிலம் போன்றவற்றை பலரும் வாங்குகின்றனர். அதனால் நிலத்தின் மதிப்பு நகர்ப்புறங்களில் அதிகமாகும் நிலையில், வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு, வங்கி கடன், எதிர்காலத்தில் கைகளுக்கு வரக்கூடிய முதிர்வு தொகை ஆகியவற்றை கணக்கில் கொண்டு வருங்கால நலன் என்ற அடிப்படையில் வீடு–மனை வாங்குபவர்கள் முதலாவது ரகம். 

நிதி முதலீடு என்ற அடிப்படையில் 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு பிறகு பணி ஓய்வு மற்றும் வயதான காலத்தில் பயன்

படும் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் அல்லது தனது வாரிசுகளுக்கான எதிர்கால தேவை என்ற வகையிலும் செய்யப்படும் முதலீடுகள் இரண்டாவது ரகம். 

மேற்கண்ட இரண்டு நிலையையும் சாராமல் குறிப்பிட்ட பகுதியின் சந்தை மதிப்பு அதிகம் ஆகலாம் என்ற கணக்கில் முதலீடு செய்பவர்கள் மூன்றாம் ரகம். அதாவது, மனை அல்லது நிலம் வாங்கப்பட்ட குறுகிய காலத்தில், அப்பகுதியின் வளர்ச்சி காரணமாக விலை அதிகரிக்கலாம் என்ற நிலையில், லாபத்தை கணக்கிட்டு மறு விற்பனை செய்ய முதலீடு செய்பவர்கள் இந்த கணக்கில் வருகிறார்கள்.

முதலீடு செய்வதற்கு முன்னர்...  

* சந்தை நிலவரங்களை தெரிந்து கொண்டு கையில் உள்ள சேமிப்பு மற்றும் சிறிய அளவில் கடன் மூலம் தக்க அடிப்படை வசதிகள் கொண்ட நகர்ப்புறங்களில் வீடு அல்லது மனை வாங்கலாம். மேலும், இரண்டு அல்லது மூன்று நபர்கள் சேர்ந்து சம அளவாக முதலீடு செய்யும் போது ‘ரிஸ்க் அபெடைட்’ (ஸிவீsளீ கிஜீஜீமீtவீtமீ) குறைவாக இருக்கும். 

* வீட்டு மனை அல்லது இடத்துக்கு அருகில் சாலை அகலப்படுத்தல் உள்ளிட்ட இதர நகர விரிவாக்க திட்டத்தின் அடிப்படையில் நிலம் கையகப்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளதா..? என்ற வி‌ஷயத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.  

* கட்டி முடிக்கப்பட்டு 15 வருட காலம் அல்லது அதற்கு மேல் ஆன அடுக்குமாடிகளில் உள்ள குடியிருப்பு அல்லது தனி வீடு ஆகியவற்றை வாங்க முடிவு செய்பவர்கள் கட்டிட அமைப்பை தக்க பொறியாளர் உதவியுடன் ஆய்வு செய்து கொண்டு முடிவெடுப்பது நல்லது.  

* பழைய அடுக்குமாடிகளை இடித்து அகற்றிவிட்டு, புதிய வசதிகளுடன் ‘ரீ–டெவலப்மென்டு’ திட்டம் மேற்கொள்ளப்பட வாய்ப்புகள் உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட வீட்டின் யு.டி.எஸ் அளவு எவ்வளவு என்ற கணக்கீட்டை கவனிக்கவேண்டும்.

சந்தை வளர்ச்சிக்கான காரணிகள்

அரசின் வீட்டு வசதி திட்டம், ரெரா சட்டம் போன்றவற்றால் வீடுகள் அல்லது மனைகள் விலை ஓரளவுக்கு குறைந்ததால்  பலரும் அவற்றை வாங்கினார்கள். மேலும்  கட்டுமான நிறுவனங்கள் தங்களது 

முந்தைய புராஜெக்டுகளை விரைவாக செய்து முடித்து அடுத்த திட்டங்களை மேற்கொண்டதால் சந்தையின் தேவை வளர்ச்சி பெற்று வருகிறது. 

மேலும், வீட்டுமனை மற்றும் வீடுகள் விற்பனையில் வெளிப்படைத்தன்மை உருவானதன் அடிப்படையில் கட்டுனர்களிடம் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட அளவுக்கு விலை குறைவாக கேட்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் வீடுகளின் விற்பனை வருடாந்திர அடிப்படையில் 15 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன. 

வங்கிகள் அளிக்கும் சலுகைகள் மூலம் நிதி உதவி பெற்று வாங்கியவுடன் குடியேறும் நிலையில் வீடுகள் கிடைப்பதும் பலரது ஆர்வத்தை அதிகமாக்கி இருக்கிறது. சென்ற ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 10 முதல் 12 சதவிகிதம் வரை கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் விற்பனை கூடுதலாகியிருப்பது கவனிக்கத்தக்கது.

Next Story