வலிமையான கான்கிரீட்டுக்கு ஏற்ற ரசாயனங்கள்
வழக்கமான கான்கிரீட் தயாரிப்பில் சிமெண்டு, ஜல்லி, மணல் மற்றும் நீர் ஆகியவற்றை பயன்படுத்துவதோடு, இன்றைய காலகட்ட தொழில்நுட்ப வளர்ச்சிகளின் அடிப்படையில் ரசாயன கலவைகளும் சேர்க்கப்படுகின்றன.
அவற்றில் அதிகப்படியான பயன்பாட்டில் இருக்கும் வகைகள் பற்றி காணலாம்.
கால நீட்டிப்பு ரசாயன கலவை (Retarding Admixture) என்பது தொடக்க நிலை இறுகும் (Initial Setting) நீட்டிக்க உதவி செய்கிறது. தொலைதூரங்களுக்கு எடுத்து சென்று பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவை நீண்ட நேரம் இறுகி விடாமல் இந்த வகை ரசாயன கலவை தடுக்கிறது.
நீர் குறைக்கும் ரசாயனம் (WaterReducing Admixture) என்பது கான்கிரீட்டில் குறைவான நீரை பயன்படுத்தி அதே சமயத்தில் தேவையான வேலைக்கு உகந்த தன்மையை (Workability) பெற உதவுகிறது. மேலும், நீர் சிமெண்டு விகிதம் (Water Cement Ratio) குறைவதால் கான்கிரீட்டின் வலிமை கூடுகிறது.
காற்று உறைய வைக்கும் ரசாயனம் (Air entraining Admixture) என்பது கான் கிரீட்டில் காற்றை உருவாக்கும் தன்மை வாய்ந்தது. வேலைக்கு உகந்த தன்மை பெற உதவும் இந்த வகை ரசாயன கலவை, கான்கிரீட் எளிதில் உறைவதை தடுக்கிறது. எனவே, குளிர் காலங்களில் மற்றும் குளிர் பிரதேசங்களில் இந்த வகை ரசாயன கலவை பயன்படுகிறது.
அதி குழைவு ரசாயன கலவை (Super Plasticizer Admixture) என்பது நீரை குறைக்கவும், இறுகும் நேரத்தை நீடிக்கவும் உதவுகிறது. இதன் காரணமாக அதிக வலிமையுள்ள உயர்தர கான்கிரீட்டை (High Grade Concrete) தயாரிக்க முடிகிறது. ரெடிமிக்ஸ் கான்கிரீட் தயாரிப்புக்கு இந்த சேர்கலவை பயன்படுகிறது.
கான்கிரீட்டில் நீர்க்கசிவை தடுக்கும் நீர்க்கசிவு தடுப்பு ரசாயன (Water proofing Admixture) வகையும் கான்கிரீட் அமைப்புகளின் பயன்பாட்டில் உள்ளது.
மேற்கண்ட ரசாயன கலவைகளை அனைத்து சிமெண்டு வகைகளோடும் கலந்து பயன்படுத்த இயலாது என்று அறியப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிமெண்டு வகையுடன் பொருந்தக்கூடிய ரசாயன கலவை மற்றொரு சிமெண்டு வகையுடன் சரியாக பொருந்தாமல் போகலாம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதனால் குறிப்பிட்ட ரசாயன கலவையை கான்கிரீட்டில் சேர்ப்பதற்கு முன்னர் சிமெண்டு வகையுடன் பொருந்தும் தன்மை குறித்த சோதனையை (Compatibility Test) செய்து கொள்வது அவசியம்.

Related Tags :
Next Story