கண்கவரும் சுவர்களுக்கு பல வண்ண ‘வால்பேப்பர்கள்’


கண்கவரும் சுவர்களுக்கு பல வண்ண ‘வால்பேப்பர்கள்’
x
தினத்தந்தி 10 Nov 2018 1:24 PM IST (Updated: 10 Nov 2018 1:24 PM IST)
t-max-icont-min-icon

வீடுகளுக்கான ‘அவுட்லுக்’ என்பது, அதன் இன்டீரியர் டிசைனில் உள்ளதாக உள் அலங்கார வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதாவது, சுவர்களில் ‘வால் ஆர்ட்’, ‘தீம் வால் ஸ்டிக்கர்’, ‘வால் டெக்ஸ்டர்’ ஆகியவற்றின் மூலம் அலங்காரம் செய்வது தற்போதைய டிரெண்டாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, சுவர் முழுவதுமோ அல்லது தேவையான இடங்களிலோ வால் பேப்பர் ஒட்டுவது வீட்டுக்கு கலை அழகுடன் கூடிய தோற்றத்தை அளிப்பதாக இருக்கும். அவற்றில் உள்ள சில வழிகளை இங்கே காணலாம்.

அறைகளின் தோற்றம்

விருந்தினர்கள் மற்றும் வீட்டில் வசிப்பவர்கள் ஆகியோர் மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தும் விதத்தில் சுவர் அலங்கார அமைப்புகள் இருப்பது அறியப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, சுவருக்கு பொருந்தாத வண்ணம் கொண்ட அலங்காரங்கள் அறையின் தோற்றத்தை மங்கலாக மாற்றுவதோடு, குடியிருப்பவர் மன நிலையிலும் சோர்வை உண்டாக்குகின்றன.

வால் பேப்பர்கள்

வீட்டின் சில அறைகளுக்கு மட்டுமே வால்பேப்பர் பயன்படுத்தும்போது அழகாக இருக்கும். பொதுவாக, படுக்கையறைக்கு வெளிர் நிறம், குழந்தைகள் அறைக்கு விதவிதமான வண்ணப்படங்கள், கார்ட்டூன், விளையாட்டுப் படங்கள், வரவேற்பறை பகுதியில் கற்பனை வடிவங்கள் கொண்ட படங்கள், சமையலறைகளுக்கு மென்மையான ‘சீக்வன்ஸ் டிசைன்’ கொண்டவை வால்பேப்பர்கள் கச்சிதமாக இருக்கும்.

மேலும், குறிப்பிட்ட தீம் அடிப்படையிலும், சிங்கிள் டிசைன் போஸ்டர்கள், பல்வேறு வண்ணங்கள், வடிவங்களுடன் உள்ள கொலாஜ்கள் என்றும் வெவ்வேறு வகை வால் பேப்பர்கள் சந்தையில் இருக்கின்றன. குறிப்பாக, புளோரா, கிளாமர், லிவ் இன்ஸ், வால் டாப்ஸ் ஆகியவற்றோடு மினி பிரிண்ட்ஸ் என்ற சிறிய அளவு வடிவமைப்பு கொண்ட வால்பேப்பர்களும் அறைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

வால் ஆர்ட்


குறிப்பிட்ட இடத்தில் மியூரல் வேலைப்பாடுகள் அல்லது வித்தியாசமான உருவ பெயிண்ட்டிங் செய்யப்படும் இந்த முறைப்படி அறைகளின் குறிப்பிட்ட பகுதியை அழகாக மாற்றலாம். குட்டி பசங்களை படங்கள் வரைய சொல்லி அவர்களை குஷிப்படுத்தலாம்.

வால் ஸ்டிக்கர்ஸ்

வால் ஸ்டிக்கர்களை ரசனைக்கு ஏற்ப தேர்வு செய்ய இணைய தளங்களும் உதவுகின்றன. அறைகளின் பாரம்பரிய அழகுக்கு நான்-ஓவன், நவீன தோற்றத்துக்கு ஓவன், வித்தியாசமான அழகுக்கு ஹேண்ட்மேடு ஆகியவை பொருத்தமாக இருக்கும்.

பரிசோதனை அவசியம்

வால் பேப்பர் ஏதேனும் ஓரு இடத்தில் கிழிந்துவிட்டால், அதே அளவுக்கு வால் போஸ்டரை ஒட்டிக்கொள்ள இயலும். அறைகளின் சுவர்கள் வால்பேப்பர் வகைகளை ஒட்டுவதற்கு முன்னதாக சுவர்களில் எந்த பகுதியிலாவது நீர்க் கசிவு இல்லை என்பதையும் சீரான பரப்பையும் சோதித்து அறிந்து அதன் அடிப்படையில் செயல்படுவது நல்லது. 

Next Story