தேசிய வீட்டு வசதி வங்கியின் ரியல் எஸ்டேட் சந்தை மதிப்பீடு


தேசிய வீட்டு வசதி வங்கியின் ரியல் எஸ்டேட் சந்தை மதிப்பீடு
x
தினத்தந்தி 1 Dec 2018 12:18 PM IST (Updated: 1 Dec 2018 12:18 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புறங்களில் அமைந்துள்ள வீடு-மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களுக்கான சந்தை விலை நிலவரம் குறித்த தர மதிப்பீடுகளை தேசிய வீட்டு வசதி வங்கி (National Housing Bank Residex) புள்ளி விபரங்களாக வழங்கி வருகிறது.

இந்திய அரசு நிதி அமைச்சகத்தின் கீழ் தேசிய வீட்டு வசதி வங்கி செயல்படுத்தி வரும் ‘என்.எச்.பி ரெசிடெக்ஸ்’ குறியீடு என்பது இந்திய அளவில் வீடு மற்றும் மனைகளின் விலைகளுக்கான அதிகாரப்பூர்வ மதிப்பீடாக உள்ளது. 2007-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த மதிப்பீட்டு முறை தக்க தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் வழிகாட்டுதலின் கீழ் அட்டவணையாக தொகுத்து காலாண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது.

அதன் மூலம் ஒரு வீடு அல்லது மனையின் ஒரு சதுர அடி விலை, சதுர மீட்டர் விலை, வீட்டின் சராசரி விலை மற்றும் சம்பந்தப்பட்ட ஏரியாவில் உள்ள வீட்டு வாடகை நிலவரம் என பல்வேறு விஷயங்களை கவனிக்க இயலும்.

அவற்றின் மூலம், குறிப்பிட்ட நகரத்தில் உள்ள வீடு-மனை உள்ளிட்ட சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு மற்றும் 3 மாதங்களுக்கு முந்தைய நிலவரம் போன்றவற்றை அறிந்து கொண்டு அவற்றின் அடிப்படையில் வீடு அல்லது மனையின் விலையை நிர்ணயிக்க வாய்ப்புகள் உள்ளன.

வீட்டு விலை குறியீடு (Housing Price Indices), நிலத்தின் விலை குறியீடு (Land Price Indices) மற்றும் கட்டுமான பொருட்கள் விலை குறியீடு (Building Materials Price Indices) வீட்டு வாடகை குறியீடு (Hosing Rental Index) ஆகிய விவரங்கள் இதில் உள்ளன. மார்க்கெட் நிலவரம் பற்றி அறிந்து செயல்பட என்.எச்.பி ரெசிடெக்ஸ் உதவிகரமாக இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

Next Story