உங்கள் முகவரி

கட்டுமான துறையினருக்கு அரசின் தொழில்நுட்ப பயிற்சிகள் + "||" + Technical training of the government for construction industry

கட்டுமான துறையினருக்கு அரசின் தொழில்நுட்ப பயிற்சிகள்

கட்டுமான துறையினருக்கு அரசின் தொழில்நுட்ப பயிற்சிகள்
வேகமாக வளர்ந்து வரக்கூடிய கட்டுமான துறையில் வரும் காலங்களில் அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே கட்டுமான துறை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருபவர்களுக்கும், புதிதாக அதில் நுழைபவர்களுக்கும் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் தொழில் பயிற்சி (Vocational Training) பெற வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டுள்ளது.

கட்டுமான தொழில் மேம்பாட்டு கவுன்சில்

அதன் அடிப்படையில் கட்டுமான துறையில் தொழில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவற்றை மத்திய திட்டக்குழு (தற்போது நிதி ஆயோக்) The Planning Commission (Niti Aayog) மற்றும் கட்டுமான தொழில் துறை (Indian Construction Industry) ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள கட்டுமான தொழில் மேம்பாட்டு கவுன்சில் (Construction Industry Development Council -CIDC) வழங்கி வருகிறது.

மூன்று மாத பயிற்சி

அந்த பயிற்சிகளில் சாதாரண கட்டிட தொழிலாளி முதல் கட்டிட வரைபடம் வரைபவர், கட்டுமான பொறியாளர் வரை கட்டுமான துறையில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் ஒரு குழுவுக்கு 3 மாதங்கள் என பயிற்சி அளிக்கப்படுகிறது.

பல்வேறு பணிகள்

அந்த வகையில் கார்பெண்டர், எலக்ட்ரிஷியன், மேசன், பெயிண்டர், பிளம்பர், வெல்டர், கிரேன் ஆபரேட்டர், கான்கிரீட் மிக்ஸர் ஆபரேட்டர், சைட் அக்கவுண்டண்டு, சேப்டி இன்ஸ்பெக்டர், கான்கிரீட் வைப்ரேட்டர் ஆபரேட்டர் மற்றும் பிட்டர் உள்ளிட்ட 49 வகையான பணிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி பெறுபவர்கள் நேரடியாக கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு பயிற்சிகள் தரப்படுகின்றன.

பணிக்கான வாய்ப்புகள்

பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் தொழிலாளர் துறை மற்றும் கட்டுமான தொழில் மேம்பாட்டு கழகம் ஆகியவை இணைந்து சான்றிதழ் வழங்குகின்றன. அந்த சான்றிதழின் அடிப்படையில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெறலாம் அல்லது நேரடியாக தொழில் தொடங்கி வருமானம் ஈட்டலாம். வெளிநாடுகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களில் பணியாற்ற இந்த சான்றிதழ் முக்கியமான தகுதியாக எடுத்துக்கொள்ளப்படுவது கவனிக்கத்தக்கது.

பல இடங்களில் பயிற்சி

தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம் (Tamil Nadu Skill Development Corporation) மற்றும் மத்திய அரசின் கட்டுமான தொழில் மேம்பாட்டு கவுன்சில் ஆகியவை இணைந்து TNSDCCIDC- SkillDevelopment Program என்ற பயிற்சியை தமிழகத்தின் பல நகரங்களில் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. பயிற்சி பெற விரும்புபவர்கள் இந்த இணைய தளம் மூலம் தங்கள் சுய விவரங்களை உள்ளடு செய்து பதிவு செய்து பயன் பெறலாம். https://www.tnskill.tn.gov.in/index. php/login/listtraorg


தொடர்புடைய செய்திகள்

1. தரைத்தள அழகை கூட்டும் விதவிதமான ‘டைல்ஸ்’ வகைகள்
கட்டமைப்புகளின் தரைத்தளம் மற்றும் சுவர் ஆகியவற்றில் பதிப்பதற்கு ஏற்ற பல்வேறு வகை பதிகற்கள் சந்தையில் கிடைக்கின்றன. பல்வேறு விதங்களில் உள்ள அவற்றின் தன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
2. வளர்ச்சி பாதையில் தாம்பரம்-சுற்றுப்புற பகுதிகள்
தென் சென்னையின் முக்கிய நகரமான தாம்பரம் தி.நகர் போலவே வியாபார நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், துணிக் கடைகள், வீட்டு உபயோக பொருட்களின் கடைகள், வணிக வளாகங்கள் என்று மாறிவருகிறது.
3. வீட்டு கடன்களுக்கு காப்பீடு அவசியம்
வீட்டு கடன் பெறுவதன் மூலம் சொந்த வீடு வாங்குவதுதான் இன்றைய சூழலில் பெரும்பாலானோர் வழக்கமாக உள்ளது.
4. உயிர் சக்தியை வெளிப்படுத்தும் வண்ண மீன் தொட்டிகள்
உயிர் சக்தியை வெளிப்படுத்தக்கூடிய தாக வும், அழகு மற்றும் வாஸ்து காரணங்களுக் காகவும் வீடுகளில் மீன் தொட்டிகள் வைக்கப்படு வது வழக்கம்.
5. இணைய தளம் மூலம் ஆவண பதிவு மேற்கொள்ளும் முறைகள்
ஆன்லைன் மூலம் ஆவண பதிவை மேற்கொள்வதற்கான நடைமுறைகள் பற்றிய தொகுப்பை கீழே காணலாம்.