வீடு–மனையில் உள்ள சிக்கல்களுக்கு வாஸ்து காட்டும் வழிமுறைகள்


வீடு–மனையில்  உள்ள  சிக்கல்களுக்கு  வாஸ்து  காட்டும்  வழிமுறைகள்
x
தினத்தந்தி 29 Dec 2018 4:00 AM IST (Updated: 28 Dec 2018 3:38 PM IST)
t-max-icont-min-icon

‘எலி வளை ஆனாலும் தனி வளை..’ என்ற பழமொழிக்கேற்ப சொந்த வீட்டில் குடியிருப்பது பெருமையும், மனநிறைவையும் அளிக்கக்கூடிய வி‌ஷயம்.

‘எலி வளை ஆனாலும் தனி வளை..’ என்ற பழமொழிக்கேற்ப சொந்த வீட்டில் குடியிருப்பது பெருமையும், மனநிறைவையும் அளிக்கக்கூடிய வி‌ஷயம். ஆனால், இன்றைய காலகட்டம் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் கொண்டதாக அமைந்துள்ள நிலையில் சொந்த வீடு என்ற லட்சியத்தை அடைய பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவது பலருக்கும் அனுபவமாக உள்ளது.  

இரண்டு வித முறைகள்

வீடு–மனை ஆகியவற்றை அடைவதில் உள்ள சிக்கல்களுக்கு வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இரண்டு விதமான வழிகளை காட்டி இருக்கின்றனர். முதலாவது வழி பூமி வசிய முறை என்றும், இரண்டாவது வழி கிரக வசிய முறை என்றும் குறிப்பிடப்பட்டுள்ள நம்பிக்கை சார்ந்த வி‌ஷயங்கள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

முதலாவது வழிமுறை

இந்த வழிமுறையானது ஜோதிட கிரக சிந்தாமணி என்ற பெரிய வருசாதி நூலில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது, 

* அஸ்தம், பரணி, திருவோணம் மற்றும் விசாகம் ஆகிய நான்கு நட்சத்திரங்கள் அமைந்த நாளில், நட்சத்திரத்தின் நான்காம் பாதம் உள்ள நேரத்தை கணக்கிட்டு கொள்ளவேண்டும்.

* அன்று செவ்வாய் கிழமையாக இருப்பது அவசியம்.

* மேற்கண்ட இரண்டு நிலைகளும் உள்ள நாளில் வரக்கூடிய கடக லக்னம் அமைந்த நேரத்தில் சுத்தமான மண்ணை சிறிய அளவில் பிரசாதமாக சாப்பிட வேண்டும். அதன் மூலம் பூமி, மனை மற்றும் வீடு ஆகிய பாக்கியம் கிடைக்கும் என்று பாடல் வடிவத்தில் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட முறையில் மண்ணை எடுக்க சுத்தமான ஒரு இடத்தில் மேல் பரப்பில் உள்ள மண்ணை ஒதுக்கி விட்டு சுமார் மூன்றடி ஆழத்தில் இருக்கும் சுத்தமான மண்ணை எடுத்து முன்னதாக வைத்துகொள்வது அவசியம். மேற்கண்ட நேரத்தில் இஷ்ட தெய்வம், வாஸ்து மற்றும் செவ்வாய் ஆகியவற்றுக்கு பூஜைகள் செய்து பழங்களில் வைக்கப்பட்ட சிறிதளவு மண்ணை பிரசாதமாக உண்பதன் மூலம் சொந்த வீடு அல்லது மனை வாங்கக்கூடிய யோகம் வாய்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இரண்டாவது வழிமுறை

வீடு அல்லது மனை வாங்க தேவையான வசதிகள் அமைந்த பலருக்கும் எதிர்பாராத தடைகள் காரணமாக அவற்றை வாங்குவது தாமதமாகி கொண்டு இருக்கக்கூடும். அது போன்ற சூழலில் உள்ளவர்களுக்கு வாஸ்து கிரக வசிய முறை என்ற வழி வாஸ்து வல்லுனர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

ஒரு ஆண்டுக்கு 8 முறை வாஸ்து கண் விழிக்கும் நாளாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த நாட்களில் கிரக வசிய முறையை கடைப்பிடித்து பயன்பெறலாம். 

வாஸ்து விழித்தெழும் நாட்கள் 

* சித்திரை – 10–ம் நாள் காலை 8–55 முதல் 9–30 மணி வரை.

* வைகாசி – 21–ம் நாள் காலை 10–06 முதல் 10–42 மணி வரை.

* ஆடி – 11–ம் நாள் காலை 7–38 முதல் 8–14 மணி வரை.

* ஆவணி – 6–ம் நாள் பகல் 3–18 முதல் 3–54 மணி வரை.

* ஐப்பசி – 11–ம் நாள் காலை 7–42 முதல் 8–18 மணி வரை.

* கார்த்திகை – 8–ம் நாள் காலை 11–09 முதல் 11–45 மணி வரை.

* தை – 12–ம் நாள் காலை 10–50 முதல் 11–26 மணி வரை.

* மாசி – 22–ம் நாள் காலை 10–12 முதல் 10–48 மணி வரை.

மேற்கண்ட எட்டு நாள்களில் எந்த நாளிலும் கிரக வசிய பூஜையை செய்து கொள்ளலாம் பூஜைகள் வழக்கமான முறைப்படி மங்களன் என்ற செவ்வாய் மற்றும் வாஸ்து புரு‌ஷன் ஆகியவர்களுக்கு செய்வது முறை. அதன் மூலம் மனை வாங்குவதில் உள்ள தடைகள், மனை வாங்கிய பிறகு வீடு கட்டுவதில் உள்ள தடைகள் ஆகியவை அகலும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

Next Story