டைல்ஸ் பயன்பாட்டில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்


டைல்ஸ்  பயன்பாட்டில் கவனிக்க  வேண்டிய அம்சங்கள்
x
தினத்தந்தி 28 Dec 2018 10:00 PM GMT (Updated: 28 Dec 2018 10:19 AM GMT)

டைல்ஸ் பயன்படுத்தும்போது அடுத்தடுத்த கற்கள் சந்திக்கும் பகுதியில் சின்ன இடைவெளிகள் இருக்கும். அதில் நாளடைவில் அழுக்கு சேர்ந்து தரையின் அழகு மற்றும் தோற்றம் ஆகியவை பாதிக்கப்படலாம்.

டைல்ஸ் பயன்படுத்தும்போது அடுத்தடுத்த கற்கள் சந்திக்கும் பகுதியில் சின்ன இடைவெளிகள் இருக்கும். அதில் நாளடைவில் அழுக்கு சேர்ந்து தரையின் அழகு மற்றும் தோற்றம் ஆகியவை பாதிக்கப்படலாம். அதை ‘கெமிக்கல் திரவம்’ மூலம் கழுவப்படும்போது ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு இரு டைல்ஸ்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளியில் பயன்படுத்துவதற்கேற்ற ‘பில்லர் மெட்டீரியல்’ தனியே கிடைக்கிறது. அவற்றின் மூலம் தரைத்தளம் பல ஆண்டுகள் நீடித்து உழைக்கும் என்று சொல்லப்படுகிறது. 

இத்தாலி நாட்டு மார்பிள் பதிகற்களின் மேற்புறத்தில் ‘எபாக்சி கோட்டிங்’ செய்யப்பட்டு பளபளப்பாக மாற்றி விற்கப்படுவதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் கம்பெனி பிராண்டு டைல்ஸ் வகைகளில் போலிகள் இருப்பதை கண்டறிய அவற்றை தண்ணீரில் அமிழ்த்தி வைத்திருந்து எடை போட்டுப் பார்க்கலாம். ஒரே எடை உள்ளவை தரமானவை என்றும், வெவ் வேறு எடைகளை காட்டு பவை போலிகள் என்றும் கண்டறியலாம். கம்பெனி பிராண்டு டைல்ஸ் வகைகளில் எடை வித்தியாசம் இருப்பதில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story