உங்கள் முகவரி

சுவர்களை எளிதாக அமைக்க உதவும் தொழில்நுட்பம் + "||" + The technology that helps to easily set up walls

சுவர்களை எளிதாக அமைக்க உதவும் தொழில்நுட்பம்

சுவர்களை எளிதாக அமைக்க உதவும் தொழில்நுட்பம்
தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் செயற்கை கட்டுமான பொருளாக உள்ள ‘சாண்ட்விச் பேனல்’ அமைப்பு இன்றைய காலகட்டத்தில் பரவலான உபயோகத்தில் இருந்து வருகிறது.
இந்த அமைப்பில் இரண்டு பக்கமும் ‘ஸ்டீல் ஹிட்டுகளும்’, இடையில் பாலியூரித்தினும் நிரப்பப்பட்டிருக்கும். மேலைநாடுகளில் பரவலாக உள்ள இந்த தொழில் நுட்பம் நமது பகுதிகளில் இப்போது பரவி வருகிறது. ‘ஜிங்க் கோட்டிங்’ மற்றும் கண்கவர் வண்ணம் போன்றவை இதன் சிறப்பம்சங்களாகும்.

சாண்ட்விச் பேனல்கள் கொண்டு எளிதாகவும், வேகமாகவும், கட்டுமானங்களின் கூரைகள் மற்றும் அறைகளின் பக்கவாட்டு சுவர்களை சுலபமாக உருவாக்கலாம். தொழிற்சாலைகள், சேமிப்பு கிடங்குகள், பெரிய வளாகங்கள் போன்ற கட்டுமானங்களுக்கு இவை பொருத்தமாக இருக்கும். சுற்றுப்புற தட்பவெப்ப நிலைகளால் பாதிக்கப்படாத காரணத்தால் குளிர் சாதன கிடங்குகள் அமைக்கவும் ஏற்றதாக அறியப்பட்டுள்ளது. சான்ட்விச் பேனல் மூலம் கீழ்க்கண்ட பயன்கள் கிடைப்பதாக தெரியவந்துள்ளது.

* அறைகளுக்கிடையில் பார்டிஷன் சுவர்களை எளிதாக அமைக்க இயலும்.

* சென்டரிங் பணிகள் மேற்கொள்ளவேண்டியதில்லை.

* இவ்வகை பேனல்களுக்கு ‘பால்ஸ் சீலிங்’ (False Ceiling) அமைப்பு வேண்டியதில்லை.

* உபயோகத்தில் உள்ள பேனல்களை அகற்றும் நிலையில் அவற்றை வேறு இடத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

* இவ்வகை சுவர்கள் நெருப்பால் பாதிக்கப்படுவதில்லை.

* அறையின் சுவர்களாக அமைக்கப்படும்போது சுற்றுப்புற வெப்பத்தின் தாக்கம் உட்புகாமல் தடுக்கப்படுகிறது.

* மேற்கூரைகளுக்கான குறுக்கு சட்டங்கள் (Purlin) அமைக்க வேண்டிய அவசியமில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. கட்டுமான துறையில் நவீன தொழில் நுட்பங்கள்
ஒவ்வொரு புது வருட தொடக்கத்திலும் கட்டுமான துறையில் முக்கியமான பங்காற்றக்கூடிய நவீன மாற்றங்கள் பற்றி நிபுணர்கள் குறிப்பிடுவது வழக்கம்.
2. பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை உடனே பெறும் வசதி
பதிவு அலுவலகங்களில் ஆவண பதிவு முடிந்த ஒரு மணி நேரம் கழித்து அவற்றை உடனே வழங்கும் திட்டம் இந்த மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கப்படுவதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
3. வீடுகளில் பொருத்தப்படும் லாக்கர் அமைப்புகள்
வீடுகள் மற்றும் குடியிருப்புகளின் கட்டுமான பணிகளின்போதே பாதுகாப்புக்கு உதவும் லாக்கர் அமைப்பை எங்கே பொருத்துவது என்பதை கச்சிதமாக முடிவு செய்து செயல்பட வேண்டும்.
4. மணல் பயன்பாட்டில் கவனம் தேவை
கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் மணலில் அதிகமான தூசுதுரும்புகள் இருக்கக்கூடாது.
5. வாஸ்து மூலை : வீட்டின் வடமேற்கு பாகம்
* வாஸ்து ரீதியாக வாயு மூலை என்ற வடமேற்கு பாகம் வீட்டில் குடியிருப்பவர்களின் மன நலனை பிரதிபலிக்கும் தன்மை பெற்றது.