வீடுகளில் பொருத்தப்படும் லாக்கர் அமைப்புகள்


வீடுகளில் பொருத்தப்படும் லாக்கர் அமைப்புகள்
x
தினத்தந்தி 12 Jan 2019 3:18 PM IST (Updated: 12 Jan 2019 3:18 PM IST)
t-max-icont-min-icon

வீடுகள் மற்றும் குடியிருப்புகளின் கட்டுமான பணிகளின்போதே பாதுகாப்புக்கு உதவும் லாக்கர் அமைப்பை எங்கே பொருத்துவது என்பதை கச்சிதமாக முடிவு செய்து செயல்பட வேண்டும்.

அதன் மூலம் லாக்கர் இருப்பது வெளியே தெரியாத வகையில் ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் அமைக்க இயலும். பொதுவாக, லாக்கர் அமைப்புகள் தரைத்தளத்தில் அமைக்கப்படுவது வழக்கம். அந்த நிலையில் உள்ளே வைக்கப்படும் பொருட்கள் சுற்றுப்புற வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகிய காரணங்களால் பாதிக்கப்படலாம். அதனால், அறையில் உள்புறமாக உள்ள சுவர்களில் அவற்றை அமைக்கலாம் என்று உள்கட்டமைப்பு வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

லாக்கர் அமைப்புகளை வடக்கு அல்லது கிழக்கு திசைகளில் உள்ள பிரதான சுவர்களில் பொருத்துவது சிறப்பு என்று வாஸ்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவற்றை வெளியே தெரியாமல் மறைப்பதற்கு தனிப்பட்ட படங்கள் மற்றும் அலமாரி வகைகளும் சந்தையில் கிடைக்கின்றன. பூட்டு, நம்பர் லாக், கைரேகை பதிவு லாக் என்ற வழக்கமான முறைகளுடன் தற்போது வாய்ஸ் மேட்ச், ஐ வியூ மேட்ச் போன்ற உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட லாக்கர் வகைகளும் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story