ரியல் எஸ்டேட் துறையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு
இந்திய அளவில் ரியல் எஸ்டேட் துறையில் கடந்த இரு ஆண்டுகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் (என்.ஆர்.ஐ) முதலீடு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக பல்வேறு ரியல் எஸ்டேட் கள ஆய்வு நிறுவனங்கள் மற்றும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய அளவில் ரியல் எஸ்டேட் துறையில் கடந்த இரு ஆண்டுகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் (என்.ஆர்.ஐ) முதலீடு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக பல்வேறு ரியல் எஸ்டேட் கள ஆய்வு நிறுவனங்கள் மற்றும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களது தகவல்களின்படி அன்னிய செலாவணி விகிதத்தில் ஏற்பட்ட மதிப்பு வேறுபாடுகள் காரணமாக இந்திய ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதை லாபகரமான தேர்வாக என்.ஆர்.ஐ–கள் கருதுகின்றனர்.
சொந்த ஊர்களில் முதலீடு
சென்ற ஆண்டில் இந்திய அளவிலான மொத்த ரியல் எஸ்டேட் முதலீட்டில் என்.ஆர்.ஐ–க்களின் பங்கு கிட்டத்தட்ட 15 முதல் 20 சதவிகிதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், 75 சதவிகிதத்துக்கும் மேலான வெளிநாடு வாழ் இந்தியர்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதை விரும்புவதாகவும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, தங்களது சொந்த ஊர்களில் இடம், மனை, வீடுகள் என்று வாங்குவதன் காரணமாக இரண்டாம் நிலை நகரங்களிலும் அவர்களது முதலீடுகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இளம் வயது முதலீட்டாளர்கள்
வருங்காலத்தில் இந்தியாவில் குடியேற விரும்பும் இளம் வயது என்.ஆர்.ஐ–கள் இந்தியாவில் சொந்த வீடு வாங்க திட்டமிடுகிறார்கள். அதன் அடிப்படையில் அரபு நாடுகளிலிருந்து மட்டுமே 18 முதல் 35 வயது வரையிலான இளைய வயது என்.ஆர்.ஐ–களில் 43 சதவீதம் பேர் இந்திய ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளதாக வெளியான தகவல் கவனிக்கத்தக்கது.
அரசின் கவனம்
நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிக்கும் நோக்கில், ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய விரும்பும் என்.ஆர்.ஐ–களுக்காக முதலீட்டு தேர்வுகளை அதிகரிக்கும் நோக்கில் கொள்கைகளையும், திட்டங்களையும் அரசு வகுத்துள்ளது.
தனியார் நிறுவனங்களின் ஆலோசனை
வீடு அல்லது மனை வாங்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உதவும் நோக்கில் சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற தென்னக பெரு நகரங்களில் உள்ள பல்வேறு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தக்க ஆலோசனைகளை அளித்து வருகின்றன.
என்.ஆர்.ஐ–களுக்கு ஏற்ற பகுதிகளில் உள்ள வீடுகள் அல்லது மனைகளை விலைக்கு வாங்குவது மற்றும் மனையிடங்களில் ‘ஜாயிண்டு வென்ஜர்’ ஒப்பந்த முறையில் கட்டமைப்புகளை உருவாக்க ஆலோசனைகள் அளிப்பது, ரியல் எஸ்டேட் முதலீடு தொடர்பாக அரசு அமைப்புகளின் அங்கீகாரத்தை பெறுவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் அந்த நிறுவனங்கள் வழங்குகின்றன.
Related Tags :
Next Story