கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ‘பெல்ட்’


கட்டுமான  தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு  ‘பெல்ட்’
x
தினத்தந்தி 19 Jan 2019 3:00 AM IST (Updated: 18 Jan 2019 3:49 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமானத்துறையில் மேற்கொள்ளப்படும் பணிகளில் சில வகைகள் உடல் நலத்தை பாதிக்கக்கூடிய சூழலில் செய்யப்படுகின்றன.

ட்டுமானத்துறையில் மேற்கொள்ளப்படும் பணிகளில் சில வகைகள் உடல் நலத்தை பாதிக்கக்கூடிய சூழலில் செய்யப்படுகின்றன. மிகுந்த பளு உள்ள பொருட்களை சுமந்தவாறு மேலே ஏறுவது, மின்சார சாதனங்களை பயன்படுத்துவது, கயிற்றின் உதவியுடன் உயரத்தில் தொங்கியபடி பணிகளை செய்வது ஆகிய சூழல்களில் பணியாளர்கள் தக்க பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்கிறார்களா..? என்பதை ஒரு அறையிலிருந்தவாறே கண்காணிக்க ‘கைனெடிக் ரிப்ளக்ஸ்’ என்ற இடுப்பில் அணியும் பெல்ட் உபகரணம் உதவுகிறது.    

மானிட்டரில் ஆய்வு

அந்த பாதுகாப்பு பெல்ட் அணிந்து கொண்டு பணிபுரியும்போது தவறான முறைகளில் நிற்பது, அதிக எடை கொண்ட பொருட்களை முறையற்ற விதத்தில் கையாள்வது, கயிற்றில் தொங்கி பணி புரியும்போது சரியாக செயல்படாதது போன்ற நிலையில் அலுவலக அறையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் மானிட்டரில் அவை
Bio Mechanical Analysis
  முறையில் ஆய்வு செய்யப்பட்டு செய்தியாக தெரிவிக்கப்படும்.  

வழிகாட்டும் ‘வை–பை’

மேலும், ஒரு ஷிப்ட் முடிந்த பின்னர் அந்த பெல்ட்டில் உள்ள ‘வை–பை’ கருவி சிக்னல்கள் மைய கணினிக்கு பணியாளரின் அனைத்து நடவடிக்கைகளையும் தகவலாக பதிவு செய்துவிடும். அதன் மூலம் எந்தெந்த வகையில் பணியாளர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை அவருக்கு அளிக்க இயலும். 

ஊழியர்களின் கவனம்

தொடர்ச்சியாக 15 மணி நேரம் இயங்கக்கூடிய பேட்டரி பொருத்தப்பட்டதாகவும், தண்ணீரால் பாதிக்கப்படுவது மற்றும் கனமான பொருட்களால் மோதப்பட்டு உடைவதிலிருந்து தடுப்பு போன்ற ஏற்பாடுகள் கொண்டதாக இந்த பெல்ட் உபகரணம் செயல்படுகிறது. மேலும், ஒரு நாளில் அதிகப்படியான எச்சரிக்கைகளை பதிவு செய்யும் பணியாளருக்கு தக்க எச்சரிக்கைகளையும் அளிக்கிறது. அதன் மூலம் குறைவான எச்சரிக்கை பெற்ற பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனங்கள் ஊக்கத்தொகை போன்ற சலுகைகளை அளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலை நாடுகளில் பயன்பாடு

2017–ம் ஆண்டில் அறிமுகமான இந்த பெல்ட் நமது நாட்டில் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அமெரிக்க நாட்டில் இந்த பெல்ட் உபயோகம் காரணமாக பணியாளர்களின் முதுகுவலி, உடல் வலி போன்ற பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Next Story