இயற்கை வெளிச்சத்திற்கேற்ப கட்டிட திசையமைப்பு


இயற்கை வெளிச்சத்திற்கேற்ப கட்டிட திசையமைப்பு
x
தினத்தந்தி 18 Jan 2019 9:45 PM GMT (Updated: 18 Jan 2019 10:26 AM GMT)

கட்டுமான அமைப்புகள் அவற்றின் திசையமைப்பை பொறுத்து சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் இருக்கலாம்.

ட்டுமான அமைப்புகள் அவற்றின் திசையமைப்பை பொறுத்து சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் இருக்கலாம். செவ்வக வடிவத்தில் கட்டிடங்கள் அமையும்போது கிழக்கு–மேற்கு திசைகளில் அதிக நீளம் கொண்டவை மற்றும் வடக்கு–தெற்கு திசைகளில் நீளம் கொண்டவை என்ற இரண்டு விதங்களில் அமையும். 

வடக்கு–தெற்கு திசைகள் நீளமாக உள்ள கட்டமைப்புகளில் சூரியனின் பாதைக்கு ஏற்ப நாள் முழுவதும் இயற்கையான வெளிச்சமும், காற்றும் கிடைக்கும். கிழக்கு–மேற்கு திசைகளில் அதிக நீளம் கொண்ட கட்டிடங்களுக்கு இதர அமைப்புகள் மற்றும் சுற்றுப்புறம் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில்தான் வெளிச்சமும் காற்றும் நுழையும். 

சென்னை போன்ற கடற்கரை நகரங்களில் பிற்பகல் வேளைகளில் கிழக்கிலிருந்து வீசும் கடற்காற்று, கட்டிட அமைப்புகளுக்குள் நுழையும் விதத்தில் கச்சிதமான திசையமைப்பு மற்றும் ஜன்னல்களை அமைக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. 

Next Story