அசல் முத்திரைத்தாளை கண்டறியும் வழிகள்


அசல் முத்திரைத்தாளை கண்டறியும் வழிகள்
x
தினத்தந்தி 18 Jan 2019 9:30 PM GMT (Updated: 18 Jan 2019 10:56 AM GMT)

ஆவண பதிவுகளுக்காக முத்திரை தாள்கள் வாங்கும் போது அவை ஒரிஜினல் தாள் என்பதை உறுதி செய்துகொள்ள கீழ்கண்ட விவரங்களை கவனிக்க வேண்டும்.

வண பதிவுகளுக்காக முத்திரை தாள்கள் வாங்கும் போது அவை ஒரிஜினல் தாள் என்பதை உறுதி செய்துகொள்ள கீழ்கண்ட விவரங்களை கவனிக்க வேண்டும்.

* சம்பந்தப்பட்ட கருவூலத்தின் உலோக முத்திரை தேதியுடன் இடப்பட்டிருக்கும். போலி களில் பெரும்பாலும் இரப்பர் ஸ்டாம்ப் மட்டுமே இருக்கும்.

* ஒரிஜினல் முத்திரைத்தாளின் தரம், அச்சு, மற்றும் தோற்றம் பளிச்சென்று நேர்த்தியாக இருக்கும். போலிகள் சற்றே மங்கலாக தோற்றமளிக்கும்

* அரசு முத்திரை தாள் நல்ல தரமான பேப்பராக இருக்கும். போலிகள் சாதாரண பாண்டு பேப்பரில்கூட அச்சிடப்பட்டு இருக்கலாம்.

* அசோக சக்கரம் மற்றும் வாட்டர் மார்க் இமேஜ் ஆகியவை இரண்டு புறமும் உள்ளீடாக தெளிவாக தெரியும். போலிகளில் வாட்டர் மார்க் இமேஜ் மற்றும் அசோக சக்கரம் ஆகியவை தெரியாது.

* புற ஊதா கதிர் ஒளியில் ஒரிஜினல் பேப்பரை கவனித்தால் அதன் பாதுகாப்பு அம்சங்கள் தெரியும். போலியாக இருந்தால் எதுவும் கண்ணுக்கு புலப்படாது.

* ஒரிஜினல் ஸ்டாம்ப் பேப்பரை சுலபமாக கிழிக்க இயலாது. போலி பேப்பரை கைகளால் எளிதாக கிழிக்க இயலும்.

Next Story