தெரிந்து கொள்வோம் – ரியல் எஸ்டேட்


தெரிந்து கொள்வோம் – ரியல் எஸ்டேட்
x
தினத்தந்தி 18 Jan 2019 9:30 PM GMT (Updated: 18 Jan 2019 11:06 AM GMT)

ரியல் எஸ்டேட் என்பது அனைவருக்கும் தெரிந்த பொதுவான வி‌ஷயம். ஆனால், வீடு, மனை, பூமி உள்ளிட்ட கட்டிட அமைப்புகளுக்கும் ரியல் எஸ்டேட் என்பதற்கும் என்ன தொடர்பு என்பது பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

ரியல் எஸ்டேட் என்பது அனைவருக்கும் தெரிந்த பொதுவான வி‌ஷயம். ஆனால், வீடு, மனை, பூமி உள்ளிட்ட கட்டிட அமைப்புகளுக்கும் ரியல் எஸ்டேட் என்பதற்கும் என்ன தொடர்பு என்பது பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

வீடு, மனை விற்பனை செய்வதற்கான ‘ரியல் எஸ்டேட்’ என்ற வர்த்தக சொல்லாடல் 17–ம் நூற்றாண்டிலேயே வழக்கத்தில் இருந்ததாக அறியப்பட்டுள்ளது. நிலம் அல்லது கட்டிடங்களுக்கான உரிமையாளர்கள் காலப்போக்கில் மாறினாலும் அவை நிலையாகவும், உண்மை தன்மை கொண்டதாகவும் இருப்பதால் ரியல் என்று குறிப்பிடப்பட்டன. அந்த காலத்தில் ஒரு நாட்டின் குடிமகன் இறந்து விட்டால் அவரது சொத்துக்கள் நாட்டு மன்னனுக்கு உரிமை என்ற நிலையில் இறந்தவரது வாரிசுகள் சொத்து உரிமையை பெற மன்னனுக்கு அனுமதி மடல் வரைவார்கள். அந்த வகையில் ‘ராயல் எஸ்டேட்’ என்பதே காலப்போக்கில் ரியல் எஸ்டேட்–ஆக மாற்றம் பெற்று விட்டது என்ற கருத்தும் இருக்கிறது.

ரியல் எஸ்டேட் என்பது பூமி, நிலம் மற்றும் வீட்டு மனையை பொறுத்தது. மேலும், எந்த நிலமும் இன்னொரு நிலத்தைப்போல அச்சு அசலாக அப்படியே அமைந்திருப்பதில்லை என்ற அடிப்படையில் ரியல் எஸ்டேட் என்று குறிப்பிடப்பட்டதாகவும் கருத்துகள் உள்ளன.
Realis
என்ற லத்தீன் மொழி வார்த்தையின் பொருளில் உள்ள உண்மையை குறிக்கும் நிலம், வீடு போன்றவை நிஜமானவையாக கருதப்பட்டன. அதாவது பார்ப்பவர் அனைவரது கண்களுக்கும் வேறுபாடுகள் இல்லாமல் அவை ஒரே தோற்றத்துடன் அமைந்திருக்கும்.

ரியல் எஸ்டேட் என்பதன் மூலம் அசையா சொத்துக்கள் ‘ரியல் பிராபர்ட்டி’ என்றும் ‘ரியால்டி’ என்றும் குறிப்பிடப்படுகின்றன. அசையா சொத்து (Real Property, Real Estate, Realty, Immovable Property) என்பது குறிப்பிட்ட பூமியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்களான கட்டிடங்கள், காம்பவுண்டு சுவர், கிணறு உள்ளிட்ட நிலையான கட்டமைப்புகள் அனைத்தும் அடங்கிய தொகுப்பாக உள்ளது. 

Next Story