ஆவணங்களில் உள்ள வட்டார வழக்கு சொற்கள்
பழைய ஆவணங்களில் நிறைய வட்டார வழக்கு சொற்கள் குறிப்பிடப்பட்டிருப்பதை பலரும் கவனித்திருப்போம். அத்தகைய சொற்களில் சிலவற்றின் அர்த்தங்களை இங்கே காணலாம்.
* குறிப்பிட்ட ஒரு வீடு அல்லது மனைக்கு நான்கு புறமும் உள்ள பகுதிகளை அதன் நான்கு எல்லை விவரங்கள் என்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இப்போது குறிப்பிடப்படுகிறது. முன்னர் நான்குமால், தச்சுமுழம், செக்குபந்தி மற்றும் ஷெட்யூல் என்று எழுதப்பட்டது.
* குறிப்பிட்ட இடமானது பூமி, சைட், நிலம் மற்றும் மனை என்று சொல்லப்பட்டது.
* நிலத்திற்குரிய சர்வே எண் என்பதை புல எண், காலம் சர்வே நம்பர், க.ச. எண், காளை நம்பர் என்றும் குறிப்பிடப்பட்டது.
* கிராமங்களில் அடங்கல் கணக்கு மட்டும் இருக்கும் நிலையில் பத்திரங்களில் அதை பைமாஷ் நம்பர் என்று எழுதப் பட்டிருக்கும்.
Related Tags :
Next Story