குடியிருப்புகளுக்கு அவசியமான கூடுதல் வசதிகள்
தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி வீடுகளின் கட்டுமான பணிகளின்போது மனதில் கொள்ள வேண்டிய பொதுவான சில விஷயங்கள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.
* மின்சார ‘சுவிட்ச்’ மற்றும் ‘பிளக்’ போன்றவை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
* மின்சார வினியோகம் தடைப்படும் சமயங்களில் பயன்படும் யு.பி.எஸ் பாக்ஸ் அமைப்புகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் ‘லாப்ட்’ மேல் வைப்பதுதான் பாதுகாப்பானது.
* வீட்டில் உள்ள எல்லா அறைகளிலும் ‘எர்த் ஒயர்’ சரியாக பொருத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியமானது.
* மேல்மட்ட தண்ணீர் தொட்டி நிரம்பிவிடும் பட்சத்தில் தானாகவே நின்றுவிடும் ‘ஆட்டோ சுவிட்ச் ஆப் சிஸ்டம்’ இருக்க வேண்டும்.
* தனி வீடுகளின் வெளிப்புறம் புல்வெளி அமைத்து மரத்தாலான பெஞ்சுகள் போட்டு வைத்தால் மாலை நேரங்களில் ஓய்வாக அமர்ந்து கொள்ள வசதியாக இருக்கும். அங்கே குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ரிலாக்ஸாக அமர ரெடிமேடு ஊஞ்சல் ஒன்றையும் அமைத்துக்கொள்ளலாம்.
* வீடுகளில் போர்டிகோ பகுதி அதிகம் பயன்படுத்தப்படும் என்ற நிலையில் வழுக்கும் தன்மையற்ற ‘ஆன்டி ஸ்கிட் புளோர் டைல்ஸ்’ வகைகளை பதிப்பது நல்லது. அதனால் ஈரப்பதம் காரணமாக வழுக்கும் தன்மை இருக்காது.
* மேல்மாடிக்கு செல்ல வெளிப்புற படிக்கட்டுகள் அமைக்கும்போது அவை அகலம் அதிகமாகவும், உயரம் சற்று குறைவாகவும் இருந்தால் அனைவரும் எளிதாக ஏறி இறங்க வசதியாக இருக்கும். பெரியவர்கள் கால் வலி இல்லாமல் படிகளை பயன்படுத்த இயலும்.
* வீட்டிற்கு வெளிப்புறத்தில் தனிப்பட்ட முறையில் சிறிய அளவில் ‘வெஸ்டர்ன் குளோசெட்’ கொண்ட ஒரு பாத்ரூம் அமைத்துக்கொள்வது பல விதங்களில் உதவியாக இருக்கும். அந்த அறையின் தேவைகளான தண்ணீர் சுட வைப்பது, மின் விளக்கு ஆகியவற்றிற்கு சோலார் தகடுகள் அமைத்து பெறப்பட்ட மின்சாரத்தை பயன்படுத்தலாம்.
* பாத்ரூமில் பொருத்தப்பட்ட கண்ணாடி, வாஷ் பேசின் ஆகியவற்றின் கீழ்ப்புறமாக கப்போர்டு அமைப்பதன் மூலம் பொருட்களை அதில் வைத்துக்கொள்ள இயலும்.
* செங்கல் அல்லது கான்கிரீட் பிளாக் மூலம் அமைக்கப்பட்ட வீட்டின் சுவர் பூச்சு சிமெண்டு முற்றிலுமாக உலர்வதற்கு முன்னர் தேவையான இடங்களில் ஆணிகள் அல்லது அதற்கான துளைகள் போட்டு அதற்குள் மர குச்சி வைத்து அடைத்து விடலாம். அதன் காரணமாக சுவர்களில் ஏற்படும் பதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன.
Related Tags :
Next Story