கட்டுமான பணியில் மூலப்பொருள்கள் பயன்பாடு
மாத தவணையில் கட்டுமான பொருட்களை கடனுக்கு வாங்கும் நிலையில் அதன் மொத்த மதிப்புக்கு மேல் குறிப்பிட்ட அளவு அதிக பணம் தரவேண்டியதாக இருக்கலாம்.
பொருட்களின் அவசியத்திற்கேற்ப ரொக்க பணம் தந்து வாங்குவதற்கும், கடன் கணக்கில் வாங்குவதற்கும் உள்ள பண மதிப்பில் கவனம் தேவை என்று கட்டுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சிக்கனம் என்பது நோக்கமாக இருந்தாலும் பொருட்களின் தரத்தில் எந்தவித சமரசமும் வேண்டாம் என்பதும், கட்டுமான பணிகள் முடிந்த பின்னர் சிறிது காலம் கழித்து மேற்கொள்ள வேண்டிய பராமரிப் புகளில் சிக்கல்கள் ஏற்படலாம்.என்பதும் அவர்களின் அவர்களது கருத்தாகும். காரணம் தரமற்ற பொருட்கள் ஒரு சில வருடங்களில் வீட்டு பரா மரிப்பில் செலவுகளை எகிற வைத்து விடும். மேலும், கட்டுமான பணிகளுக்கான மூலப்பொருட்கள் ஜாக்கிரதையாக பாதுகாத்து வைக்கப்பட வேண்டும். சூரிய வெளிச்சம் நேரடியாக படியுமாறு கட்டுமான ரசாயன பொருட்களை வைப்பது, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களுக்கு பக்கத்தில் ‘வெல்டிங்’ அல்லது ‘எலக்ட்ரிக்கல்’ வேலை செய்வது, கூரை அமைக்காமல் பொருட்களை திறந்த வெளியில் மழைத்தண்ணீரில் நனையும்படி வைத்திருப்பது ஆகியவை தவறான முறைகளாகும். சரியான ‘பிளாஸ்டிக் ஷீட்கள்’ கொண்டு பொருட்களை மூடி வைப்பது பல வகைகளில் பாதுகாப்பானது.
Related Tags :
Next Story