இரும்பு கதவை பாதுகாக்கும் பெயிண்டு வகை


இரும்பு  கதவை  பாதுகாக்கும் பெயிண்டு   வகை
x
தினத்தந்தி 9 Feb 2019 4:00 AM IST (Updated: 8 Feb 2019 3:39 PM IST)
t-max-icont-min-icon

வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள நுழைவாசல் கேட் பெரும்பாலும் இரும்பால் தயாரிக்கப்பட்டதாக இருக்கும்.

வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள நுழைவாசல் கேட் பெரும்பாலும் இரும்பால் தயாரிக்கப்பட்டதாக இருக்கும். குறிப்பாக, வீட்டின் பிரதான கேட் உள்ளே வருபவர்களின் கண்ணில் முதலில் தெரிவது என்ற நிலையில் அவற்றின் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 

பராமரிப்பு அவசியம்

நுழைவாசல் கேட் என்பது வீட்டின் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருக்கின்றன. வெயில், மழை, பனி உள்ளிட்ட பல காரணங்களால் அவற்றின் உறுதி படிப்படியாக குறைந்து விடும் வாய்ப்புகள் இருக்கின்றன. இரும்பு கேட்டுகளை சரியான காலகட்டங்களில் கவனித்து முறையாக பராமரித்தால் மட்டுமே அவை நீடித்து உழைக்கும்.

துருவிலிருந்து பாதுகாப்பு

இரும்பு கேட்டுகள் எப்போதும் பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்க வேண்டுமானால் அவற்றில் துரு பாதிப்பை தடுக்க வேண்டும். பொதுவாக, இரும்பு கேட்டுகள் அல்லது கதவுகளை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சுத்தம் செய்வது, ஈரம் இல்லாது துடைத்து உலர்வாக வைத்து கொள்வது போன்ற தடுப்பு முறைகளால் துருப்பிடிப்பதை ஓரளவுக்கு தவிர்க்க இயலும்.

எபாக்ஸி பிரைமர் வகைகள்

இரும்பு கதவுகள் மற்றும் கேட்டுகளை துரு பாதிப்பு இல்லாமல் சுலபமான முறையில் பராமரிக்க சந்தையில் எபாக்ஸி பிரைமர்கள் வகைகள் இப்போது கிடைக்கின்றன. நுழைவாயில் கேட்டுகள் பராமரிப்பில் இவ்வகை எபாக்ஸி பிரைமர்கள் 40 மடங்குக்கும் மேல் உறுதியாக செயல்படுகின்றன. அதனால், கோடை வெயில், பனி, பலத்த மழை உள்ளிட்ட இயற்கை பாதிப்புகளிலிருந்து இரும்பு கதவுகளை பாதுகாக்க ஏற்றதாக அதன் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நீடித்த உழைப்பு

எபாக்ஸி பிரைமர்கள் துரு பாதிப்பிலிருந்து இரும்பு கதவுகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல் அதன் உலோக பரப்பில் இதர கீறல்கள் விழுவதிலிருந்தும் தடுக்கின்றன. தட்பவெப்ப நிலைகளால் உண்டாகும் அரிப்பை தடுக்கும் ரசாயன முறைப்படி தயாரிக்கப்பட்ட இவ்வகை எபாக்ஸி பிரைமர் பெயிண்டு வகைகளின் கரையாத உறுதி தன்மை கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கும் மேல் ‘சால்ட் ஸ்ப்ரே டெஸ்ட்’ மூலம் சோதிக்கப்படுகின்றன. பெயிண்டு எபாக்ஸி பிரைமர்கள் தற்போது சந்தையில் மாறுபட்ட வெவ்வேறு கலவைகளில் கிடைக்கின்றன என்றும் அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story