கட்டிட பணிகளில் சிக்கன நடவடிக்கை


கட்டிட பணிகளில் சிக்கன நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Feb 2019 10:00 PM GMT (Updated: 8 Feb 2019 10:24 AM GMT)

குடியிருப்புகளின் கட்டுமான பணிகளில் ‘பிரிகாஸ்ட்’ எனப்படும் ‘ரெடிமேடு’ பகுதிகளை பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ள இடங்களில் பயன்படுத்தி, கட்டுமான பட்ஜெட்டில் குறிப்பிட்ட அளவுக்கு சேமிக்க இயலும்.

குடியிருப்புகளின் கட்டுமான பணிகளில் ‘பிரிகாஸ்ட்’ எனப்படும் ‘ரெடிமேடு’ பகுதிகளை பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ள இடங்களில் பயன்படுத்தி, கட்டுமான பட்ஜெட்டில் குறிப்பிட்ட அளவுக்கு சேமிக்க இயலும். நுழைவுப்படிகள், மாடிப்படிகள், ‘லேண்டிங்’, ‘பர்கோலாக்கள்’ ஆகியவற்றை ரெடிமேடாக வாங்கி பயன்படுத்தி குறைவான காலகட்டத்தில் சிக்கனமாக பணிகளை மேற்கொண்டு முடிக்கலாம். மேலும், சமையலறை, பாத்ரூம் மற்றும் கழிவறை ஆகியவற்றின் கதவுகளை யு.பி.வி.சி அல்லது பி.வி.சி மெட்டியலாக தேர்வு செய்தால் பல நன்மைகள் உண்டு. காரணம், அவற்றுக்கு எண்ணெய் விட்டு பராமரிப்பது, பெயிண்டு அடிப்பது போன்ற வேலைகளை செய்ய வேண்டியதில்லை என்பதுடன் அவை எடையும் குறைவாக இருப்பதோடு ஈரப்பதம் காரணமாக பாதிப்புக்கு உள்ளாவதில்லை. குறிப்பாக அவற்றின் எடை குறைவாக இருப்பதால் கட்டிடத்தின் மீது ஏற்படக்கூடிய சுமை பெருமளவு குறைவதால் கட்டிடத்தின் நீடித்த உழைப்புக்கு ஏற்றதாக இருக்கும்.

Next Story