வயரிங் பணிகளில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்
வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள அறைகளில் ‘கன்சீல்டு ஒயரிங்’ அம்சங்கள்.
வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள அறைகளில் ‘கன்சீல்டு ஒயரிங்’ (Concealed wiring) பணிகளை செய்யும்போது ஒவ்வொரு அறையிலிருந்தும் சப்ளை வயர்கள் தனித்தனி பைப் மூலம் மெயின் போர்டு வைக்க வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதுதான் முறையானது. ஆனால், ஒரு சிலர் பைப் செலவை குறைக்கும் நடவடிக்கையாக மூன்று அறைகளுக்கும் உரிய சப்ளை ஒயர்களை ஒரே பைப்பில் திணித்து எடுத்து செல்வதாக அறியப்பட்டுள்ளது.
அதாவது, அறைகளில் உள்ள சுவிட்ச் போர்டுகளுக்கு, வயர்கள் அனைத்தையும் கொண்டு வந்து, திரும்பவும் அவற்றை மேற்கூரைக்கு கொண்டு போய், அதற்கு அடுத்துள்ள அறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த முறையில் எல்லா அறைகளுக்கும் உரிய சப்ளை வயரை ஒரே பைப்பில் கொண்டு செல்லப்படுவதால் பல்வேறு சிக்கல்கள் உருவாகின்றன.
மேற்கண்ட முறையின் மூலம் பைப் செலவில் சிக்கனம் என்ற கருத்தில் வயர்கள் கூடுதலான அளவில் பயன்படுத்தப்படுவதால் எவ்வித லாபமும் இல்லை என்பதை எலக்ட்ரீஷியன்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக பைப் அமைத்து, அதன் வழியாக வயர்களை கொண்டு செல்வதுதான் சரியான முறை என்றும், அதன் மூலம் பராமரிப்பு பணிகள் எளிதாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story