விரைவு கட்டுமானங்களுக்கு ஏற்ற ‘மெட்டல் ஷீட்டுகள்’


விரைவு கட்டுமானங்களுக்கு ஏற்ற ‘மெட்டல் ஷீட்டுகள்’
x
தினத்தந்தி 16 Feb 2019 3:28 PM GMT (Updated: 16 Feb 2019 3:28 PM GMT)

பல்வேறு அவசர தேவைகளின் அடிப்படையில் தற்காலிக ‘ஷெட்’, வீடுகள் மற்றும் இதர கட்டமைப்புகளை ‘மெட்டல் பில்டிங்’ மற்றும் ‘மெட்டல் ரூபிங்’ ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்படுகின்றன.

கட்டுமான துறையில் இந்த முறை தவிர்க்க இயலாத இடத்தை பெற்றுள்ளது. அத்தகைய உலோக கட்டமைப்புகளுக்கான ‘பாலிகார்பனேட் ஷீட்டுகள்’, ‘ரூபிங் வெண்டிலேஷன்’, ‘ரூபிங் ஸ்குரூக்கள்’ மற்றும் ‘டெக்கரேடிவ்ஸ்’ ஆகிய துணைப்பொருள்கள் நமது பகுதிகளில் உள்ள பல நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன.

அடுக்குமாடி கட்டுமான பணிகளுக்கு தேவைப்படக் கூடிய தற்காலிக இருப்பிடம் அல்லது குறைந்த செலவிலான வீடு ஆகியவற்றுக்கு இந்த மெட்டல் பில்டிங் முறை ஏற்றதாக இருக்கும். குறைந்த கால அவகாசத்தில் முழுமையான கட்டுமானத்தை அமைக்கும் இந்த முறையை மற்ற கட்டுமான தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும்போது குறைவான பட்ஜெட் கொண்டது என்பது கவனிக்கத்தக்கது. மெட்டல் பில்டிங் அமைப்புகளில் பொருத்தப்படும் ‘பாலிகார்பபேனட் ஷீட்டுகள்’ இரு பக்கங்களிலும் வெப்ப தடுப்பு (Thermal Resistence) மற்றும் எளிதில் உடையாத தன்மை ஆகிய தன்மைகளுடன் உருவாக்கப்படுவதாக அதன் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story