ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி அடையும் தென் மாநிலங்கள்


ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி அடையும் தென் மாநிலங்கள்
x
தினத்தந்தி 23 Feb 2019 1:01 PM IST (Updated: 23 Feb 2019 1:01 PM IST)
t-max-icont-min-icon

ரியல் எஸ்டேட் துறை குடியிருப்புகளின் விற்பனை நிலவரத்தில் இந்தியாவில் உள்ள மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளன.

ரியல் எஸ்டேட் துறை குடியிருப்புகளின் விற்பனை நிலவரத்தில் இந்தியாவில் உள்ள மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளன. மேலும், புதிய ரியல் எஸ்டேட் திட்டங்களை மேற்கொண்டு செயல்படுத்துவதில் இந்தியாவின் மற்ற பகுதிகளை விடவும் தென் மாநிலங்கள் நல்ல வளர்ச்சி பெற்றிருப்பதாகவும் ரியல் எஸ்டேட் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்ற இறக்கங்கள்

குடியிருப்பு வீடுகள் மட்டுமல்லாமல் வணிகம் மற்றும் தொழில் அலுவலகங்கள் சார்ந்த கட்டுமான பிரிவிலும் தென்னிந்திய நகரங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. கடந்த 2018-ம் வருடத்தில் ரியல் எஸ்டேட் துறையினர் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து, கடந்து வந்துள்ளனர். இந்த நிலையில் 2019-ம் ஆண்டின் தொடக்கம் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டின் சலுகைகளோடு வரவேற்க தக்க விதத்தில் அமைந்திருப்பதாக வல்லுனர்கள் பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.

வாங்கக்கூடிய விலையிலான குடியிருப்புகளின் (Affordable Housing) கட்டுமான திட்டத்தில் வீடு விற்பனை செய்யும் கட்டுனர்கள் 2020 மார்ச் 31 வரை லாபத்துக்கு வரி கட்ட வேண்டியதில்லை என்று கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கட்டுனர்கள் மேலும், குறைந்த விலை வீடுகள் திட்டத்தை மேற்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டம்

தென் இந்திய நகரங்களில், அலுவலகம் தொடர்பான ரியல் எஸ்டேட் விற்பனை 20 மில்லியன் சதுர அடிகளுக்கும் அதிகமாக உள்ள நிலையில், டெல்லி போன்ற பெருநகரங்களில் அவற்றில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே விற்பனை ஆனதாகவும் தெரிய வந்துள்ளது. ரெரா சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் ரியல் எஸ்டேட் துறை கூடுதல் வளர் ச்சி அடைந்திருப்பதாகவும் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வளர்ச்சி விகிதம்

கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது சென்ற ஆண்டில் சென்னை உள்ளிட்ட தென் மாநிலங்களின் ரியல் எஸ்டேட் விற்பனை 20 சதவிகிதம் அதிககரித்துள்ளது. அதே சமயம் வட மாநிலங்களில் 18 சதவிகிதமும், கிழக்கு பகுதிகளில் 15 சதவிகிதமும் அதிகரித்துள்ளன. குறிப்பாக, தென்னிந்திய நகரங்களில் 2018-ம் ஆண்டில் வீடு வாங்கியவர்கள் பெரும்பாலும் ஐ.டி துறை சார்ந்த பணிகளில் உள்ளவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

Next Story